இந்திய சர்வதேச திரைப்பட விழா 2025: சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் 'காகோரி' திரைப்படம்
கோவாவில் நடைபெற்று வரும் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், இயக்குநர் திரு கமலேஷ் கே. மிஸ்ரா இயக்கிய 'காகோரி' திரைப்படம் திரையிடப்பட்டு, பார்வையர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது. 1925-ம் ஆண்டு நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க காகோரி ரயில் புரட்சியின் நூற்றாண்டைக் குறிக்கும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் திரு கமலேஷ், "இது நெருப்பாலும் தியாகத்தாலும் செதுக்கப்பட்ட படம்," என கூறினார். ஆவணப்படமாகத் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, விரிவான வரலாற்று ஆய்வுகளுக்குப் பிறகு, 30 நிமிடத் திரைப்படமாக மாறியுள்ளது. மாபெரும் வரலாற்றைச் சுருக்கமாக அதே சமயம் உணர்வுப்பூர்வமாகத் தருவது சவாலாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
தயாரிப்பாளர் திரு ஜஸ்விந்தர் சிங் பேசுகையில், கலைஞர்கள் புரட்சியாளர்களின் பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளதாகப் பாராட்டினார். 1920-களின் பின்னணியில், ராம் பிரசாத் பிஸ்மில், அஷ்ஃபகுல்லா கான், சந்திரசேகர் ஆசாத் போன்றோர் பிரிட்டிஷ் கருவூலத்தைக் கைப்பற்ற நடத்திய துணிச்சலான போராட்டத்தையும், அவர்களின் தியாகத்தையும் இப்படம் பதிவு செய்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2192735®=3&lang=2
***
SS/SE/RJ
रिलीज़ आईडी:
2196540
| Visitor Counter:
22