56 -வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் கௌரவிக்கப்பட்டார்
56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் விருது வழங்கும் நிகழ்ச்சியில், புகழ்பெற்ற திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் 50 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை கௌரவிக்கும் நிகழ்வு விழாவின் சிறப்பம்சமாக இருந்தது.
இந்தத் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படங்களுக்கான மதிப்புமிக்க தங்க மயில் மற்றும் வெள்ளி மயில் விருதுகளும், சிறந்த படங்களுக்கான சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன. இறுதி நாள் நிகழ்வில் திரைப்படத் துறையின் மறைந்த ஆளுமைகளின் பங்களிப்புகளுக்காக அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
சினிமாவில் 50 ஆண்டுகால சாதனையைக் குறிக்கும் வகையில் ரஜினிகாந்த் அவர்கள், கோவா முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த் மற்றும் மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆகியோரால் கௌரவிக்கப்பட்டார்.
இந்திய திரைப்படத் துறைக்கு அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காகவும், இந்திய சினிமாவில் 50 பொன்விழா ஆண்டுகளை நிறைவு செய்ததற்காகவும், புகழ்பெற்ற நடிகர் திரு ரஜினிகாந்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், கோவா முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த், மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சகச் செயலாளர் திரு. சஞ்சய் ஜாஜூ மற்றும் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோர் பாராட்டுத் தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2196172
***
AD/SV/RJ
रिलीज़ आईडी:
2196434
| Visitor Counter:
3