56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா இந்தியாவின் அபார படைப்பாற்றல் திறன்களை நினைவுகூர்வதாக அமைந்திருந்தது
கோவாவில் நடைபெற்ற 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சியில், கடந்த ஆண்டில் காலமான இந்தியத் திரைப்படத் துறை, இசை, நாடகம் மற்றும் படைப்புக் கலைத் துறையைச் சேர்ந்த பல்வேறு சிறந்த கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, உணர்வுப்பூர்வமான வகையில் அமைந்திருந்தது. நாட்டின் கலாச்சாரப் பின்னணியில் நீண்டகால முத்திரையைப் பதித்துள்ள கலைஞர்களின் பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில் சிறப்பாகத் தொகுக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சியும் திரையிடப்பட்டது.
56 -வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது, நவம்பர் 24 அன்று நம்மை விட்டுப் பிரிந்த புகழ்பெற்ற திரைப்பட நடிகர் தர்மேந்திராவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் அஞ்சலி பல்வேறு துறைகளில் பங்களித்துள்ள கலைஞர்களுக்கு செலுத்தப்பட்டது: இது நடிகர்கள், இயக்குநர்கள், இசைக்கலைஞர்கள், நாடக பயிற்சியாளர்கள் மற்றும் படைப்பாற்றல் வல்லுநர்கள், இந்தியாவின் கலை பாரம்பரியத்தின் வலுவான பன்முகத்தன்மையையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தது. ஒவ்வொரு பெயரும் வாழ்நாள் முழுவதும் ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் படைப்பாற்றல் சிறப்பைக் குறிக்க்கும் வகையில் இருந்தது.
கோவா தலைநகர் பனாஜியில் உள்ள மத்திய பத்திரிகை அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:
நாம் இழந்த கலைஞர்களின் அன்பான நினைவாக..
அவர்களின் குரல்கள், அவர்களின் கலை மற்றும் அவர்களின் காட்சிகள் இந்திய சினிமாவை தொடர்ந்து வழிநடத்துகின்றன.
நமது கூட்டு நினைவில் என்றென்றும் அவை பின்னிப் பிணைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2196126
***
AD/SV/RJ
रिलीज़ आईडी:
2196384
| Visitor Counter:
11