56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளில், திரைப்பட ஆர்வலர்கள் ஜப்பானின் 'ஏ பேல் வியூ ஆஃப் ஹில்ஸ்' திரைப்படத்தை ரசித்தனர்
கோவாவில் நடைபெறும் 56-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் தாம் இரண்டாவதாக இயக்கிய 'ஏ பேல் வியூ ஆஃப் ஹில்ஸ்' என்ற ஜப்பான் திரைப்படம் திரையிடப்பட்ட பின் அதன் இயக்குநர் கெய் இஷிகாவா இன்று பத்திரிகையாளர் சந்திப்பு மண்டபத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்தார்.
இயக்குனர் இஷிகாவா கலந்துரையாடலைத் தொடங்கி வைத்து, “இது எனது முதலாவது இந்திய வருகை, இந்த அனுபவத்தை நான் உண்மையிலேயே ரசித்தேன். இந்தப் படம் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் கசுவோ இஷிகுரோ 1982-ம் ஆண்டு அதே பெயரில் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஆண்டு, பல ஜப்பானிய திரைப்படங்கள் இந்த விஷயத்தை ஆராய்கின்றன, ஏனெனில் இப்போது இரண்டாம் உலகப் போர் முடிந்து 80 ஆண்டுகள் ஆகின்றன. நானும் எப்போதும் இந்தப் பொருள் பற்றிப் பேச விரும்பினேன். ஆனால் அந்தக் காலகட்டத்தை நான் நேரடியாக அனுபவிக்காததால், சரியான மொழியைக் கண்டுபிடிப்பது சவாலாக இருந்தது. இந்த நாவலை நான் கண்டறிந்தபோது, இந்தப் பொருள் எனக்கு மிகவும் அணுகக்கூடியதாக மாறியது, மேலும் இந்தக் கதையைச் சொல்ல எனக்கு நம்பிக்கையைத் தந்தது” என்றார்
இந்தப் படத்தின் கதை, தனது தாயார் எட்சுகோவின் நாகசாகியில் போருக்குப் பிந்தைய அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு புத்தகத்தை எழுதத் தொடங்கும் ஒரு இளம் ஜப்பானிய-பிரிட்டிஷ் எழுத்தாளருடையது. தனது மூத்த மகளின் தற்கொலையால் இன்னும் வேதனைப்படும் எட்சுகோ, 1952-ம் ஆண்டு, இளம் கர்ப்பிணித் தாயாக இருந்தபோது இருந்த நினைவுகளை விவரிக்கத் தொடங்குகிறார். தனது மகள் மரிகோவுடன் வெளிநாட்டில் ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்கத் தீர்மானித்த சச்சிகோவை சந்தித்ததை மையமாகக் கொண்டது அவரது நினைவுகள். அவ்வப்போது ஒரு பயங்கரமான பெண்ணை உள்ளடக்கிய அமைதியற்ற நினைவுகளைப் பற்றிப் பேசுகிறது கதை என்று இயக்குநர் விவரித்தார்.
இந்தக் கதை அணுகுண்டைப் பற்றியது மட்டுமல்ல. வெவ்வேறு காலகட்டங்களில் இருந்த பெண்களைப் பற்றியது என்பதுதான் தன்னை இந்தக் கதைக்கு ஈர்த்தது என்று அவர் பகிர்ந்து கொண்டார். எழுத்துச் செயல்பாட்டின் இறுதிக் கட்டமாக எடிட்டிங் கருதப்படுவதால், தானே திரைக்கதையை எழுதத் தீர்மானித்ததாகவும், படத்தை எடிட் செய்ததாகவும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2195805®=3&lang=1
****
AD/SMB/SH
रिलीज़ आईडी:
2196132
| Visitor Counter:
6