பிரதமர் அலுவலகம்
இலங்கையில், டிட்வா புயல் காரணமாக ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
28 NOV 2025 3:47PM by PIB Chennai
இலங்கையில், டிட்வா புயல் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் காரணமாக தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து தவித்து வரும் அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பத்தினரின் பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் இந்த பாதிப்பிலிருந்து விரைவாக மீண்டு வருவதற்கு பிரார்த்தனை செய்வதாக தனது இரங்கல் செய்தியில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் நெருங்கிய கடல்சார் அண்டை நாடான இலங்கையுடன் உள்ள ஒற்றுமையின் வலுவான அடையாளமாக, மத்திய அரசு உடனடியாக நிவாரணப் பொருட்கள் மற்றும் முக்கியமான மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளை ஆபரேஷன் சாகர் பந்து என்ற திட்டத்தின் கீழ் அனுப்பியுள்ளது. அங்குள்ள நிலைமை சீரடையும் போது கூடுதலான உதவிகளை வழங்க இந்தியா தயாராக உள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கை மற்றும் மகாசாகர் என்ற தொலைநோக்குப் பார்வையின் கொள்கைகளால் வழிநடத்தப்பட்டு, தேவைப்படும் தருணத்தில் இலங்கையுடன் இந்தியா துணை நிற்கும் என்று பிரதமர் திரு மோடி மீண்டும் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுளள பதிவில் திரு மோடி கூறியிருப்பதாவது:
"டிட்வா புயல் காரணமாக தங்களது அன்புக்குரியவர்களை இழந்து தவித்து வரும் இலங்கை மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களின் பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் பதிப்பிலிருந்து அவர்கள் விரைவாக மீண்டு வருவதற்கு நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
நமது நெருங்கிய கடல்சார் அண்டை நாடான இலங்கையுடன் உள்ள ஒற்றுமையின் வலுவான அடையாளமாக, ஆபரேஷன் சாகர் பந்து நடவடிக்கையின் கீழ், நிவாரணப் பொருட்கள் மற்றும் முக்கியமான பேரிடர் நிவாரண உதவிகளை இந்தியா உடனடியாக அனுப்பியுள்ளது. அங்கு நிலைமை சீரடையும் போது, மேலும் உதவிகளை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கை மற்றும் தொலைநோக்கு பார்வை, மஹாசாகர் என்ற நடவடிக்கைகளால் வழிநடத்தப்பட்டு, இந்தியா உரிய நேரத்தில் இலங்கையுடன் தொடர்ந்து துணை நிற்கிறது.
@anuradisanayake”
***
SS/SV/SE/SH
(रिलीज़ आईडी: 2196036)
आगंतुक पटल : 11