குடியரசுத் தலைவர் செயலகம்
ஒடிசா சட்டமன்ற உறுப்பினர்களிடையே குடியரசுத்தலைவர் உரையாற்றினார்
प्रविष्टि तिथि:
27 NOV 2025 7:13PM by PIB Chennai
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இன்று (நவம்பர் 27, 2025) புவனேஸ்வரில் ஒடிசா சட்டமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றினார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த இடம் குறித்த பழைய நினைவுகளை அவர் பகிர்ந்து கொண்டார். ஒரு சட்டமன்ற உறுப்பினராக, தாம் கேள்விகள் கேட்டிருந்ததையும், ஓர் அமைச்சராக, இந்த அவையில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்திருந்ததையும் அவர் நினைவு கூர்ந்தார். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திலும், தேசத்தைக் கட்டியெழுப்புவதிலும் ஒடிசா குறிப்பிடத்தக்க பங்காற்றியதாக குடியரசுத்தலைவர் கூறினார்.
ஒடிசா உருவானதன் நூற்றாண்டு விழா 2036-ம் ஆண்டு கொண்டாடப்படும் என்று குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். 2036-ம் ஆண்டுக்குள் வளமான ஒடிசாவை உருவாக்க அனைத்து பங்குதாரர்களும் ஒன்றிணைந்து பாடுபட்டால், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் ஒடிசாவின் பங்களிப்பு மிகப்பெரியதாக இருக்கும் என்று அவர் கூறினார். 'தேசமே முதன்மை' என்ற உணர்வோடு அனைவரும் செயல்படுவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த தொழில்நுட்ப யுகத்தில் மக்கள் பிரதிநிதிகளாக, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஏராளமான ஆதரவாளர்களும், பின்தொடர்பவர்களும் உள்ளனர் என்று திருமதி திரௌபதி முர்மு குறிப்பிட்டார். அவர்களின் வார்த்தைகள் மற்றும் நடத்தை இரண்டும் விலைமதிப்பற்றவை என்றும், சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன சொல்கிறார்கள், எப்படிச் சொல்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் தெரிவித்தார். எனவே சட்டமன்ற உறுப்பினர்களின் நடத்தையும், வார்த்தைகளும் அவர்களின் ஆதரவாளர்கள் சமூகத்தையும், மாநிலத்தையும் கட்டியெழுப்ப உதவும் வகையில் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2195523
***
(Release ID: 2195523)
SS/VK /KR
(रिलीज़ आईडी: 2195738)
आगंतुक पटल : 17