இந்திய சர்வதேச திரைப்பட விழா 2025: பொதுமக்களுக்காகக் கடற்கரையில் 'திறந்தவெளித் திரையிடல்'
கோவாவில் நடைபெற்று வரும் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், பதிவு செய்த பிரதிநிதிகளுக்கு மட்டுமல்லாமல், உள்ளூர் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் பயன்பெறும் வகையில் 'திறந்தவெளித் திரையிடல்' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக இந்திய சர்வதேச திரைப்பட விழாவானது, 18 வயதிற்கு மேற்பட்ட தீவிர சினிமா ரசிகர்களுக்கானது என்றாலும், குடும்பங்கள் மற்றும் குழந்தைகளை மகிழ்விக்கும் நோக்கில் இந்தத் திரையிடல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இந்திய சர்வதேச திரைப்பட விழா கலை இயக்குநர் திரு பங்கஜ் சக்சேனா தெரிவித்தார்.
வயது வரம்பின்றி அனைவரும் கண்டுகளிக்கும் வகையில், சர்வதேச மற்றும் இந்தியத் திரைப்படங்கள் இங்கு திரையிடப்படுகின்றன. இந்த ஆண்டு பட்டியலில் 'ஹோம் அலோன்', 'மஞ்சும்மல் பாய்ஸ்', '12த் ஃபெயில்', 'மை பாஸ்', 'ஷியாம்ஸ் மதர்' மற்றும் 'தி ட்ரூமன் ஷோ' உள்ளிட்ட 8 படங்கள் இடம்பெற்றுள்ளன.
தீவிர சினிமா ரசிகர்களுக்கான விழாவாக மட்டுமல்லாமல், பொதுமக்களும் கொண்டாடும் ஒரு நிகழ்வாக இந்திய சர்வதேச திரைப்பட விழா மாறுவதை இந்த முயற்சி உறுதி செய்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2195320
***
SS/SE/SH
Release ID:
2195535
| Visitor Counter:
3