இந்திய சர்வதேச திரைபட திருவிழா 2025-ல் ‘மா, உமா, பத்மா’என்னும் புதிய புத்தகம் பற்றிய உரையாடல்
திரைப்பட இயக்குநரும், ஐஐடி பாம்பே பேராசிரியருமான மசார் கம்ரான் தனது புதிய படைப்பான ‘மா, உமா, பத்மா: தி எபிக் சினிமா ஆஃப் ரித்விக் கட்டக்’ புத்தகத்தை இந்திய சர்வதேச திரைபட திருவிழாவில் வெளியிட்டார், ஐஎப்எப்ஐ பத்திரிகையாளர் சந்திப்பு மண்டபம் சினிமா நினைவின் உணர்வால் நிரம்பியது. மூத்த நடிகர் தர்மேந்திராவின் மறைவுக்கு பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்த, பின்னர் இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான ரித்விக் கட்டக்கை கௌரவிக்கும் ஒரு அன்பான மற்றும் நுண்ணறிவுள்ள உரையாடல் நிகழ்ந்தது.
இந்தப் புத்தகத்தை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் வெளியீட்டு பிரிவு இயக்குநரகத்தின் முதன்மை தலைமை இயக்குநர் திரு பூபேந்திர கைந்தோலா முறையாக வெளியிட்டார். பிரபல திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி மாநாட்டில் கலந்து கொண்டு, இந்த நிகழ்விற்கு நட்புறவையும் ஈர்ப்பையும் வழங்கினார்.
‘மா, உமா, பத்மா’ புத்தகத்தை வெளியிட ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதை திரு கைந்தோலா விரிவாகக் கூறினார். ஐந்து புகழ்பெற்ற திரைப்பட ஆளுமைகளின் நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் வகையில், வேவ்ஸ் உச்சிமாநாட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பை அவர் நினைவு கூர்ந்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2193682
***
AD/PKV/SE
रिलीज़ आईडी:
2195490
| Visitor Counter:
15