இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்ற ‘தன்வி தி கிரேட்’ திரைப்படம்
கோவாவில் நடைபெற்று வரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், புகழ்பெற்ற நடிகர் மற்றும் இயக்குனர் அனுபம் இயக்கிய ‘தன்வி தி கிரேட்’ திரைப்படம் திரையிடப்பட்டது. ஆட்டிசம் குறைபாடு கொண்ட ஒரு பெண், சமூகத்தின் பார்வையைத் தாண்டி, தனது தந்தையைப் போல ராணுவத்தில் சேரத் துடிக்கும் கனவை மையமாகக் கொண்டது இப்படம்.
படத்தின் மையக்கரு குறித்துப் பேசிய திரு அனுபம் கெர், "பொதுவாக 'நார்மல்' என்பதற்கு எதிர்ச்சொல்லாக 'அப்நார்மல்' என்பதைப் பயன்படுத்துகிறோம். ஆனால், அதனை மிகச்சிறந்தது 'எக்ஸ்ட்ரா ஆர்டினரி' என்றும் கருதலாம்," என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். மனித மன உறுதி மற்றும் மாற்றத்தை வலியுறுத்தும் கதைகளையே தான் அதிகம் விரும்புவதாகவும், இப்படம் தனது தனிப்பட்ட வாழ்க்கையுடன் தொடர்புடையது என்றும் அவர் தெரிவித்தார்.
இப்படத்தின் மூலம் அறிமுகமாகும் நடிகை ஷுபாங்கி தத் பேசுகையில், அனுபம் கெர் ஒரு கண்டிப்பான ஆசிரியர் என்றும், அவரது வழிகாட்டுதலே தனது நடிப்புத் திறனை வெளிக்கொண்டு வந்ததாக குறிப்பிட்டார். மேலும், இத்திரைப்படம் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2192931
***
SS/SE
रिलीज़ आईडी:
2195481
| Visitor Counter:
20