இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தத்துவம் மற்றும் ஆன்மீகத்தைக் கொண்டு வந்த பல்கேரியாவின் 'Axis of Life'
இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், உலகெங்கிலும் உள்ள திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஒன்று கூடி, உலகளாவிய கதை சொல்லலையும் சினிமாவின் பிணைக்கும் சக்தியையும் கொண்டாடினர்.
இதில் ரஷ்யாவின் 'Transparent Lands', பல்கேரியாவின் 'Axis of Life' மற்றும் துருக்கி-ஜெர்மனி-பல்கேரியா கூட்டுத் தயாரிப்பான 'Those Who Whistle After Dark' ஆகிய திரைப்படங்கள் இடம்பெற்றன.
'Axis of Life' திரைப்படத்தின் இயக்குநர் அடனாஸ் யோர்டானோவ், இந்தியாவின் ஆழமான ஆன்மீகம் மற்றும் தத்துவ மரபுகள் தனது திரைப்படத்திற்கு முக்கிய உத்வேகம் அளித்ததாகத் தெரிவித்தார். AI வேகமாக வளரலாம், ஆனால் அது உண்மையான மனித உணர்ச்சிகளைப் பிரதிபலிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
'Transparent Lands' திரைப்படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் மாக்சிம் டோப்ரோமிஸ்லோவ், வாய்ப்புகளைத் தேடிச் சிறிய நகரங்களிலிருந்து பெருநகரங்களுக்கு மக்கள் இடம்பெயர்வது பற்றிய கருப்பொருளை வலியுறுத்தினார்.
பினார் யோர்கான்சியோக்லு, தனது முதல் திரைப்படமான 'Those Who Whistle After Dark' ஒரு சர்வதேச கூட்டு முயற்சியின் விளைவு என்றார். இந்தப் படம் ஒரு அமானுஷ்ய சந்திப்புக்குப் பிறகு மனித இருப்பு நெருக்கடிக்கு உள்ளாகும் ஒரு அருங்காட்சியக மேலாளரைப் பற்றியது.
வெவ்வேறு கலாச்சாரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும், சினிமா மக்களை ஒன்றிணைக்கும் வலிமையான ஊடகம் என இந்த விழாவில் அனைத்து திரைப்படத் தயாரிப்பாளர்களும் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தினர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2194893
(செய்தி வெளியீட்டு எண் 2194893)
***
AD/VK/SH
Release ID:
2195050
| Visitor Counter:
3