இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவில் திரு ஜிகர் நக்தா, திரு தருண் மூர்த்தி தயாரிப்பாளர்கள் திரு ரஞ்சித், அவந்திகா ரஞ்சித் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்
56-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் 6-ம் நாளான இன்று இயக்குநர் திரு ஜிகர் நக்தா, தயாரிப்பாளர் திரு ஜிதேந்திர மிஸ்ரா ஆகியோர் கோவாவில் உள்ள பத்திரிகையாளர் மையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்தனர். அப்போது மலையாளத் திரைப்படமான துடரும் பட இயக்குநர் திரு தருண் மூர்த்தி, தயாரிப்பாளர் திரு ரஞ்சித், நிர்வாகத் தயாரிப்பாளர் அவந்திகா ரஞ்சித் ஆகியோரும் இந்நிகழ்வில் இணைந்த போது உற்சாகம் அதிகரித்தது. அப்போது பேசிய இயக்குநர் திரு ஜிகர் நக்தா, கொவிட் காலத்தின் போது ராஜஸ்தானில் உள்ள தமது வீட்டிற்கு திரும்பிய போது அப்பகுதியில் உள்ள சுரங்கத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விளைவைப் புரிந்து கொள்ள முடிந்ததாகத் தெரிவித்தார். அதே வேளையில் இந்தப் பெரிய சுரங்கத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடு குறித்து மக்கள் எப்படி அறியாமல் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்று கூறிய அவர், இதை மையப்படுத்தி ஆவணப்படத்தை எடுத்து கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று உணர்ந்ததாகக் கூறினார்.
தயாரிப்பாளர் திரு ஜிதேந்திர மிஸ்ரா, ஐ எம் கலாம் என்ற திரைப்படத்துடனான தமது தொடக்கக் கால திரைப்படத்தை நினைவு கூர்ந்தார். மேலும் மாநில மொழி சினிமா மீதான தனது நீண்டகால ஆர்வத்தைப் பகிர்ந்து கொண்டார். நாக்தாவின் தனித்துவம் மிக்க திறன், தாம் இப்படத்தை தயாரிக்கத் தூண்டியதாக குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2194115
***
AD/IR/KPG/SH
Release ID:
2194338
| Visitor Counter:
5