“எல்லைகளைக் கடந்து சினிமாவைக் கொண்டாடும் இடம் IFFI தான்”: இயக்குநர் அக்னி
56-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில், வரவிருக்கும் கன்னட ஹாரர் திரைப்படமான ‘ருதிர்வனா’ குறித்த சிறப்புக் கண்ணோட்டம் வழங்கப்பட்டது. இதில் இயக்குநர் ஸ்ரீ அக்னி மற்றும் முன்னணி நடிகை திருமதி. பாவனா கௌடா ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
நடிகை பாவனா, “நிஜ வாழ்க்கையைச் சமாளிக்க உதவும் வகையில் தான் நாம் ஹாரர் கதைகளை உருவாக்குகிறோம். ‘ருதிர்வனா’வும் அதற்கேற்ப உருவாக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.
‘ருதிர்வனா’ இயக்குநராக தனது முதல் முயற்சி என்று குறிப்பிட்ட இயக்குநர் அக்னி, இந்த வகை சினிமாவுக்குத் தனிப்பட்ட மனோபலம் தேவை என்றார். குறைந்த வளங்களைக் கொண்டு ஹாரர் படங்களை வணிக ரீதியாகச் சாத்தியமாக்க முடியும்; மொத்தப் படத்தில் 40% உள் அரங்கில் படமாக்கப்பட்டதால், வளங்களைச் சிறப்பாகக் கையாள முடிந்தது என்றும் விளக்கினார்.
இந்திய சர்வதேச திரைப்பட விழா குறித்த தனது உற்சாகத்தைப் பகிர்ந்த அக்னி, “எப்போதும் இங்கு வர விரும்பினேன். இன்று எனது முதல் படமான ‘ருதிர்வனா’விற்காகப் பத்திரிகையாளர்களைச் சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த திரைப்பட விழா என்பது எல்லைகளைக் கடந்து சினிமாவைக் கொண்டாடும் இடம். இங்கு வணிகப் படங்கள், கலைப் படங்கள், ஆவணப் படங்கள் என எதுவாக இருந்தாலும், வேறுபாடு இல்லாமல் உலகெங்கிலும் இருந்து பார்க்க முடியும்,” என்றும் கூறினார்.
நடிகை பாவனா கௌடா தனது பார்வையைப் பகிர்ந்துகொண்டபோது, “மற்ற வகைத் திரைப்படங்களில் நடிப்பதை விட ஒரு ஹாரர் படத்தில் நடிப்பது முற்றிலும் வேறுபட்டது என்று குறிப்பிட்டார்.
***
AD/VK/SH
रिलीज़ आईडी:
2193858
| Visitor Counter:
19