உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அகமதாபாத்தில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சியில் குழந்தைகளுக்கு புத்தகங்களை வழங்கினார் மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா

प्रविष्टि तिथि: 22 NOV 2025 6:11PM by PIB Chennai

அகமதாபாத்தில் நடைபெற்ற  அகமதாபாத் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் குழந்தைகளுக்கு புத்தகங்களை வழங்கிய மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான  திரு. அமித் ஷா, பல்வேறு அரங்குகளைப் பார்வையிட்டார்

சமூக ஊடக எக்ஸ் பதிவில், புத்தகங்கள் அறிவின் ஆதாரமாக மட்டுமல்லாமல், ஆளுமை மேம்பாட்டிற்கான ஒரு முக்கிய ஊடகமாகவும் உள்ளன என்று திரு. அமித் ஷா கூறியுள்ளார்இன்று, நான் குழந்தைகளுக்கு புத்தகங்களை விநியோகித்தேன். ஏஎம்சி மற்றும் தேசிய புத்தக அறக்கட்டளை  ஏற்பாடு செய்த அகமதாபாத் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் பல்வேறு அரங்குகளைப் பார்வையிட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.

இலக்கிய நிகழ்ச்சிகள், நாட்டுப்புற பாடல் மற்றும் கவிதை வாசித்தல் மற்றும் ஒரு தொடக்க மன்றம் ஆகியவற்றைக் கொண்ட இந்தக் கண்காட்சி, வாசிப்பு மற்றும் திறன் மேம்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் குழந்தைகள் மற்றும் இளைஞர்களை அறிவுபூர்வமாக வளப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று திரு. ஷா கூறியுள்ளார்.

***

(Release ID: 2192922)

AD/PKV/RJ


(रिलीज़ आईडी: 2193303) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Odia , Telugu , Kannada