இந்திய சர்வதேச திரைப்படவிழாவை வண்ணமயமாக்கிய இந்தியாவின் நாட்டுப்புற கலாச்சாரங்களின் கண்கவர் நிகழ்ச்சிகள்
இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐஎஃப்எஃப்ஐ) 2025-ன் 3ம் நாளில், கோவாவின் பனாஜியில் உள்ள ஐனாக்ஸ் அரங்கத்தை, நாட்டின் பன்முகத்தன்மை கொண்ட கலை நிகழ்ச்சிகள் துடிப்பான காட்சிப் பொருளாக மாற்றின. வெள்ளித்திரைக்கு அப்பால், மாலைப் பொழுதில் நடைபெற்ற இந்தியாவின் பாரம்பரிய நாட்டுப்புற நடனங்கள் மற்றும் நாடகக் கதைசொல்லல் ஆகியவை தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படும் ஆற்றல், பன்முகத்தன்மை மற்றும் வளமான பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தன. பல்வேறு மாநிலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கலைஞர்கள், இந்திய துணைக்கண்டத்தின் வாழும் கலாச்சாரங்களுடன் திரைப்பட ஆர்வலர்களை இணைக்கும் மையமாக விளங்கினர்.
தெலங்கானா மாநிலத்தின் குஸ்ஸாடி நடனம், மேற்கு வங்கத்தின் மகிஷாசுர மர்தினி நாட்டிய நாடகம், ஓடிசாவின் சம்பல்பூரி நாட்டுப்புற நடனம், டாமன் & டையூ/ மகாராஷ்டிராவின் தார்பா நடனம், ராஜஸ்தானின் சாரி நடனம், மகாராஷ்டிராவின் லாவனி, அசாமின் ராம் வந்தனா நாட்டிய நாடகம் மற்றும் புகழ்பெற்ற பிஹு நாட்டுப்புற கலை, ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் பாரம்பரிய நடனக் கலைகள் முதலியவை பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தின.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2192963
***
AD/RB/RJ
Release ID:
2193292
| Visitor Counter:
3