PIB Headquarters
சிறு வணிகங்களையும் கிராமப்புற தொழில்முனைவோரையும் வலுப்படுத்தும் ஐஐடிஎஃப்
Posted On:
23 NOV 2025 12:07PM by PIB Chennai
புதுதில்லி பாரத மண்டபம் வளாகம் இந்தியாவின் பொருளாதார பன்முகத்தன்மையின் ஒரு துடிப்பான இடமாக தற்போது மாறியுள்ளது. பாரம்பரிய கைவினைப்பொருட்கள், வேளாண் உற்பத்திப் பொருட்கள், புத்தொழில் கண்டுபிடிப்புகள் போன்றவை இங்கு நடைபெறும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. பல்வேறு மாநிலங்களின் பொருட்கள் பிராந்திய சிறப்புத் தன்மையைப் பிரதிபலிக்கின்றன.
2025 நவம்பர் 14 அன்று தொடங்கி 14 நாட்களுக்கு நடைபெற்று வரும் 44- வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி எனப்படும் ஐஐடிஎஃப் (IITF) 2025, 'ஒரே பாரதம் - உன்னத பாரதம்' என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது. 3,500-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இதில் பங்கேற்று பலவிதமான தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளனர். இது வெறும் வணிக நிகழ்வாக மட்டுமல்லாமல், முதல் தலைமுறை தொழில்முனைவோர், கிராமப்புற கைவினைஞர்கள், உள்நாட்டுத் தயாரிப்புகள் ஆகியவற்றை ஊக்குவிக்கும் தளமாகவும் அமைந்துள்ளது.
1980-ம் ஆண்டு முதல் இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பால் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோர், கைவினைஞர்கள், புத்தொழில் நிறுவனங்கள் போன்றவர்கள், வாங்குபவர்களுடன் இணைவதற்கும் அவர்களின் சந்தை வரம்பை விரிவுபடுத்துவதற்குமான இந்தியாவின் மிக முக்கியமான தளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. பல்வேறு துறைகளில் இந்தியாவின் உற்பத்தி வலிமை, புதுமை, பாரம்பரிய கைவினைப்பொருட்கள் ஆகியவற்றின் கண்காட்சி இடமாக இது அமைந்துள்ளது. 2024-ம் ஆண்டில், இந்தக் கண்காட்சியை 10 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்வையிட்டனர். இது நாட்டின் மிகவும் முக்கிய வர்த்தக நிகழ்வுகளில் ஒன்றாக அதன் நிலையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட இணையதள இணைப்புகளைப் பார்க்கவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2193109
https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2190245
https://www.indiatradefair.com/aahardelhi/uploads/pdfs/Aahar%202025%20Fair%20Guide.pdf
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1555538
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2078289
***
(Release ID: 2193109)
AD/PLM/RJ
(Release ID: 2193163)
Visitor Counter : 3