குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக ஆந்திரப் பிரதேசம் செல்கிறார்

प्रविष्टि तिथि: 21 NOV 2025 5:26PM by PIB Chennai

குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக நவம்பர் 22, 23-ம் தேதிகளில் ஆந்திரப் பிரதேசம் மாநிலம் புட்டபர்த்தி செல்கிறார்

புட்டபர்த்தியில் பிரசாந்தி நிலையத்தில் உள்ள ஸ்ரீ சத்யசாய் உயர்கல்வி நிறுவனத்தில் நாளை (22.11.2025) நடைபெறும் 44-வது பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக குடியரசு துணைத்தலைவர் கலந்து கொள்கிறார்.

பின்னர், பால சமுத்திரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுங்கத்துறை, மறைமுக வரிகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான தேசிய பயிற்சி நிறுவனத்தின் வளாகத்தையும் அவர் பார்வையிடுகிறார். அகில இந்திய சேவைகள் துறை மற்றும் மத்திய குடிமைப்பணி சிறப்பு அடிப்படை பாடத்திட்டப் பயிற்சியில் பங்கேற்றுள்ள  அதிகாரிகளிடையே குடியரசு துணைத்தலைவர் உரையாற்றுகிறார்

-----

(Release ID: 2192564

AD/SV/KPG/SH


(रिलीज़ आईडी: 2192736) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam