சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
மும்பையில் தேசிய ஹஜ் மாநாட்டை சிறுபான்மை விவகார அமைச்சகம் நவம்பர் 22 அன்று நடத்த உள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
21 NOV 2025 1:23PM by PIB Chennai
மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம் 2025 நவம்பர் 22 அன்று மும்பையில் உள்ள ஹஜ் இல்லத்தில் ஒரு தேசிய ஹஜ் மாநாட்டை நடத்துகிறது. இந்த மாநாட்டிற்கு சிறுபான்மையின் நலஅமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சந்திரசேகர் குமார் தலைமை தாங்குவார். மேலும் 2026 ஹஜ் பயண ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்வதற்காக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச ஹஜ் குழுக்களின் நிர்வாக அதிகாரிகளை அவர் ஒன்றிணைப்பார்.
இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 1,75,000 க்கும் மேற்பட்ட யாத்ரீகர்களை ஹஜ் பயணத்துக்கு அனுப்புகிறது, மேலும் அனைத்து இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்கும் பாதுகாப்பான, சீரான மற்றும் கண்ணியமான யாத்திரை அனுபவங்களை உறுதிசெய்வதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அமைச்சகத்தின் கீழ் இந்திய ஹஜ் குழு யாத்ரீகர்களுக்கான வசதி, ஒருங்கிணைப்பு மற்றும் சேவை வழங்கலை ஒழுங்குபடுத்த ஆண்டு முழுவதும் செயல்படுகிறது. நாளைய மாநாடு, மாநில/யூனியன் பிரதேச ஹஜ் குழுக்களுக்கும் இந்திய ஹஜ் குழுவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும்.
2026 ஆம் ஆண்டு ஹஜ் பயணம் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் கவனிப்பின் மிக உயர்ந்த தரத்துடன் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, இடைவெளிகளைக் கண்டறிதல், செயல்முறைகளை நெறிப்படுத்துதல், நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
சிறுபான்மை சமூகங்களின் நலனுக்காகவும், அனைத்து இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்கும் உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வழங்குவதற்காகவும் அமைச்சகம் தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது. மாநாட்டின் முடிவுகள் வரவிருக்கும் ஹஜ் பருவத்திற்கான ஒட்டுமொத்த தயார்நிலையை கணிசமாக வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
***
(Release ID: 2192429)
AD/PKV/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2192581)
வருகையாளர் எண்ணிக்கை : 20