56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா: குழந்தைகளின் உரிமைகள் குறித்த ஐந்து திரைப்படங்கள்
இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐஎப்எப்ஐ) மீண்டும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியத்துடன் (யுனிசெப்) இணைந்து குழந்தைப் பருவத்தின் பல்வேறு கட்டங்கள், அதன் அதிசயங்கள், போராட்டங்கள் மற்றும் அழியாத உறுதிப்பாட்டைக் கொண்டாடுகிறது.
2022ல் முதன்முறையாக தொடங்கப்பட்ட இந்த ஒத்துழைப்பு நான்காவது ஆண்டாக தொடர்கிறது. 56வது IFFI பதிப்பு உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் சந்திக்கும் எதார்த்தங்களும் அதே வேளையில் அவர்களின் தைரியம், படைப்பாற்றல் மற்றும் நம்பிக்கையைக் கொண்டாடும் திரைப்படங்களை ஒன்றிணைக்கிறது.
இந்த ஆண்டின் வரிசையில் கொசோவோ, தென் கொரியா, எகிப்து மற்றும் இந்தியாவிலிருந்து ஐந்து சிறப்பான திரைப்படங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் குழந்தைப் பருவத்தின் வெவ்வேறு உண்மையை வெளிப்படுத்துகின்றன.
ஹேப்பி பர்த்டே (எகிப்து): எட்டு வயது வேலைக்காரி தோஹா தனது சிறந்த தோழி நெல்லிக்கு பிறந்தநாள் விழா நடத்த முடிவு செய்கிறாள். நவீன கெய்ரோவில் அமைந்த இந்த திரைப்படம் சலுகை மற்றும் அப்பாவித்தனத்தின் கூர்மையான பிளவுகளை அம்பலப்படுத்துகிறது.
கடல்கன்னி (இந்தியா/தமிழ்): இயக்குனர் தினேஷ் செல்வராஜின் காவியத் திரைப்படம் அனாதை குழந்தைகள் தேவதைகள் மற்றும் மத்ஸ்யகன்னிகைகளைப் பற்றி கனவு காணும் உலகத்தை விவரிக்கிறது. கற்பனையே குழந்தைகளின் முதல் உயிர்வாழ்வு வடிவம் என்பதை நினைவூட்டுகிறது.
புத்துல் (இந்தியா/இந்தி): ஏழு வயது சிறுமி பெற்றோரின் விவாகரத்தின் உணர்ச்சிப் புயலில் சிக்கி "டேமேஜ்ட் கேங்" எனப்படும் தனது நண்பர்கள் மற்றும் அன்பான தாத்தாவிடம் ஆறுதல் தேடுகிறாள்.
தி பீட்டில் ப்ராஜெக்ட் (கொரியா): வட கொரியாவிலிருந்து வரும் வண்டு தென் கொரியப் பெண்ணின் கைகளில் சேர்கிறது. இது கொரிய எல்லையின் இருபுறமும் உள்ள குழந்தைகளிடையே ஆர்வத்தையும் தொடர்பையும் தூண்டுகிறது.
தி ஒடிஸி ஆஃப் ஜாய் (கொசோவோ): புதிய யுகத்தின் விடியலில், போரில் காணாமல் போன தந்தையுடன் 11 வயது லிஸ் துக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் இடையே தத்தளிக்கிறான். போருக்குப் பிந்தைய கொசோவோ வழியாகப் பயணிக்கும் பிரெஞ்சு கோமாளி குழுவில் சேரும்போது குணமடையும் அமைதியான பயணத்தைத் தொடங்குகிறான்.
இந்த ஐந்து திரைப்படங்களும் யுனிசெப் மற்றும் இந்தியா சர்வதேச திரைப்பட விழா ஒத்துழைப்பில் இதயத்தை தொடக்கூடிய படைப்புகள். சினிமாவின் மாற்றும் சக்தியைப் பயன்படுத்தி எல்லா இடங்களிலும் உள்ள குழந்தைகளின் நம்பிக்கைகள், பயங்கள் மற்றும் வெற்றிகளுக்கு குரல் கொடுக்கின்றன.
நவம்பர் 20-28 வரை கோவாவில் நடைபெறும் 56வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்த சக்திவாய்ந்த திரைப்படங்களைக் காணத்தவறாதீர்கள் என இந்திய சர்வதேச திரைப்பட விழாக்குழு அறிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191699
வெளியிட்டு அடையாள எண்:2191699
***
AD/VK/SH
रिलीज़ आईडी:
2191875
| Visitor Counter:
6