PIB Headquarters
இந்தியாவில் திருநங்கைகளுக்கான உரிமைகள்
Posted On:
19 NOV 2025 11:07AM by PIB Chennai
2011-ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 4.87 லட்சம் திருநங்கைகள் இதர பாலின பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். திருநங்கைகைளுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு அளிப்பதன் மூலம், அவர்களுக்கான நலத் திட்டங்கள் டிஜிட்டல் அணுகுமுறைகளை மேம்படுத்துவதற்கு உதவிடும். இந்தியாவில் பாலினச் சமத்துவத்தையும், நலத்திட்டங்களில் திருநங்கைகளை உள்ளடக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேசிய சட்ட சேவைகள் ஆணையம் தொடர்பான வழக்கு 2014-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி திருநங்கைகளை 3-வது பாலினமாக அங்கீகரித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத் தீர்ப்பு அவர்களுக்கு பாலினத்தில் தனித்துவ அடையாளத்தை வழங்குவதற்கான உரிமைகளை உறுதி செய்வதுடன் சட்டப்பூர்வ அங்கீகாரத்தையும் வழங்குகிறது. மேலும், அவர்களது பாலினச் சமத்துவத்தையும் பாகுபாடற்ற இந்தத் தீர்வு உறுதி செய்வதாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191532
***
AD/SV/KPG/KR
(Release ID: 2191639)
Visitor Counter : 14