ஜவுளித்துறை அமைச்சகம்
ஜவுளித் துறைக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் 17 புதிய விண்ணப்பதாரர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
Posted On:
18 NOV 2025 3:50PM by PIB Chennai
ஜவுளித் துறைக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ், 3-வது சுற்று தெரிவில் 17 புதிய விண்ணப்பதாரர்களுக்கு மத்திய ஜவுளி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நடவடிக்கை, ஆயத்த ஆடைகள், ஜவுளி, தொழில்துறை சார்ந்த ஜவுளி ஆகிய துறைகளில் முதலீட்டை மேலும் அதிகரிக்க, உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்த இந்தியாவின் உலகளாவிய போட்டியை விரிவுபடுத்த உதவும்.
புதிதாக ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ரூ.2,374 கோடி மொத்த முதலீட்டுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரூ.12,893 கோடிக்கும் அதிகமான விற்பனை எதிர்பார்க்கப்படுவதோடு வரும் ஆண்டுகளில் 22,646 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
ஜவுளித் துறைக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்திற்கு ரூ.10,683 கோடி ஒதுக்கீட்டுடன் 2021 செப்டம்பர் 24 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஏற்கனவே நடைபெற்ற 2 சுற்று தெரிவுகளின் போது இந்தத் திட்டத்தின் கீழ், 74 விண்ணப்பதாரர்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. புதிய விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ள இணையதளம் 2025 டிசம்பர் 31 வரை திறந்திருக்கும். ஆர்வமுள்ள நிறுவனங்கள் இந்தத் திட்டத்தில் பங்கேற்க https://pli.texmin.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
***
(Release ID: 2191204)
AD/SMB/KPG/SH
(Release ID: 2191389)
Visitor Counter : 6