சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆன்டிபயாடிக் தாக்க தடுப்புக்கான தேசிய செயல்திட்டம் 2.0: மத்திய அமைச்சர் திரு ஜெ பி நட்டா தொடங்கி வைத்தார்

Posted On: 18 NOV 2025 2:18PM by PIB Chennai

ஆன்டிபயாடிக் தாக்க தடுப்புக்கான தேசிய செயல்திட்டம் 2.0-ஐ மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய திரு நட்டா, ஆன்டிபயாடிக் தாக்க தடுப்பு என்பது மிகப்பெரிய சுகாதார பிரச்சனை என்றும், இதை கூட்டு நடவடிக்கை மூலம் மட்டுமே எதிர்கொள்ள முடியும் என்று தெரிவித்தார். இதுகுறித்த விவாதம் 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2017-ம் ஆண்டு முதலாவது ஆன்டிபயாடிக் தாக்க தடுப்புக்கான தேசிய செயல்திட்டம் தொடங்கப்பட்டதாக அவர் கூறினார்.

அறுவை சிகிச்சை, புற்று நோய் சிகிச்சை மற்றும் இதர முக்கிய உடல்நல சிகிச்சைகளில் ஆன்டிபயாடிக் தாக்கம் பெரும் விளைவுகளை ஏற்படுத்துவதாக தெரிவித்தார். அதிகப்படியான மற்றும் தவறான ஆன்டிபயாடிக் பயன்பாடு பொதுவான நடைமுறையாகி விட்டதாகவும், இதற்கு உடனடியாக தீர்வுகாண வேண்டுமென்றும் அவர் கூறினார்.

இது தொடர்பாக பல்வேறு அமைச்சகங்கள் மூலம் பல முக்கிய முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதுகுறித்த விழிப்புணர்வு, கல்வி மற்றும் பயிற்சியை அதிகரிப்பதன் முக்கியத்துவம் தொடர்பாக எடுத்துரைத்தார். மருத்துவமனைகளில் நோய் தொற்று தடுப்பு, ஆய்வகத்திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றின் தேவை குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191165   

***

SS/IR/RK/SH


(Release ID: 2191381) Visitor Counter : 4