PIB Headquarters
azadi ka amrit mahotsav

இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் பயணம்

Posted On: 15 NOV 2025 3:59PM by PIB Chennai

1952 முதல், இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐஎப்எப்ஐ),  சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு  அங்கீகாரம் பெற்ற தெற்காசியாவின் ஒரே விழாவாக இருந்து வருகிறது. இது உலகளாவிய சினிமா  அந்தஸ்தைக் குறிக்கிறது. உலகின் சிறந்த திரைப்படங்களை இந்திய பார்வையாளர்களுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சியாகத் தொடங்கிய இது, பல தசாப்தங்களாக, கண்டங்கள் முழுவதிலுமிருந்து திரைப்படத் தயாரிப்பாளர்கள், சினிமா ஆர்வலர்கள் மற்றும் படைப்பாற்றல் நிபுணர்களுக்கான துடிப்பான சந்திப்புக் களமாக மாறியுள்ளது.

இந்த ஆண்டு, நவம்பர் 20 முதல் 28 வரை விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இது கோவாவில் மற்றொரு துடிப்பான பதிப்பை உயிர்ப்பிக்கிறது.

ஐஎப்எப்ஐ 2025- புதுமை, உள்ளடக்கம் மற்றும் ஒரு உலகளாவிய சினிமா காட்சி:

இந்த ஆண்டு, நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறும் 56-வது சர்வதேச திரைப்பட விழா, ஐஎப்எப்ஐ-யின் வளர்ந்து வரும் உலகளாவிய அந்தஸ்தைப் பிரதிபலிக்கும் ஒரு விரிவான விழாவாக அமையும்.  இந்தப் பதிப்பு,  ஜப்பானுடனான விழாவின் சர்வதேச கூட்டாண்மைகளை ஆழப்படுத்துகிறது. ஸ்பெயின் கூட்டாளர் நாடாக இணைகிறது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியா ஸ்பாட்லைட் நாடாக விழாவில் நுழைகிறது. ஒவ்வொன்றும் உலகளாவிய உரையாடலை வளப்படுத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்புகள், நிறுவன ஒத்துழைப்புகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளைக் கொண்டுவருகின்றன.

இந்த ஆண்டின் இந்திய சர்வதேச திரைப்பட விழா, 13 உலக பிரீமியர்கள், 5 சர்வதேச பிரீமியர்கள் மற்றும் 44 ஆசிய பிரீமியர்கள் உட்பட 81 நாடுகளிலிருந்து 240+ படங்களின் மிகச்சிறப்பான வரிசையை வழங்குகிறது. 127 நாடுகளிலிருந்து 2,314 சமர்ப்பிப்புகள்  விழாவின் சிறப்பம்சமாகும்.

பிரேசிலிய எழுத்தாளர் கேப்ரியல் மஸ்காரோவின் தி ப்ளூ டிரெயில் தொடக்கப்படமாக திரையிடப்படுகிறது.  மூன்று முக்கிய சர்வதேச போட்டிகளில் ஐந்து கண்டங்களில் இருந்து 32 படங்கள் இடம்பெறும், இது முதல் முறையாக இந்திய பார்வையாளர்களுக்கு ஆண்டின் மிகவும் பிரபலமான தலைப்புகளில் சிலவற்றைக் கொண்டுவருகிறது.

இந்திய சினிமாவின் மையப் பாரம்பரியங்களைக் கொண்டாடும் வகையில்,  குரு தத், ராஜ் கோஸ்லா, ரித்விக் கட்டக், பி. பானுமதி, பூபன் ஹசாரிகா, சலீல் சவுத்ரி ஆகியோரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும். மீட்டெடுக்கப்பட்ட தலைசிறந்த படைப்புகள் திரையிடப்படும்.

ரஜினிகாந்தின் பொன்விழா:

இதில், புகழ்பெற்ற நடிகர் திரு ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக கௌரவிக்கப்படுகிறார். இது இந்திய திரைப்பட கலாச்சாரத்தில் அவரது நீடித்த செல்வாக்கைக் கொண்டாடும் ஒரு மைல்கல்லாகும். நிறைவு விழாவில் அவர் பாராட்டப்படுவார், அவரது புகழ்பெற்ற படைப்புகள், பரவலான புகழ் மற்றும் பல தசாப்தங்களாக இந்திய கதைசொல்லலை வடிவமைப்பதில் அவரது பங்களிப்பு அங்கீகரிக்கப்படும்.

இந்திய பனோரமா 2025-ல்  25 கதைத் திரைப்படங்கள், 20 கதை  அல்லாத படங்கள் மற்றும் 5 அறிமுக திரைப்படங்கள் இடம்பெறும். தொடக்க திரைப்படம் அமரன் (தமிழ்), கதை அல்லாத படம் ககோரி.

முன்னர் பிலிம் பஜார் என்று அழைக்கப்பட்டு இப்போது வேவ்ஸ் பிலிம் பஜார் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்தியாவின் முதன்மை திரைப்படச் சந்தை 2007 முதல் ஆசியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க இணை தயாரிப்பு மற்றும் உள்ளடக்க-கண்டுபிடிப்பு தளங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இது, இந்திய கதைசொல்லிகள், உலகளாவிய தயாரிப்பாளர்கள், விழா கண்காணிப்பாளர்கள், தொழில்நுட்ப கூட்டாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் நாளைய திரைப்படங்களை வடிவமைக்க ஒன்றிணைக்கும் சந்திப்பு மைதானமாக மாறியுள்ளது.

கலைஞர்கள், பார்வையாளர்கள், படைப்பாளிகள் மற்றும் சமூகங்களை ஒன்றிணைப்பதில், எல்லைகள், மொழிகள் மற்றும் கற்பனைகளுக்கு அப்பால் மக்களை இணைக்கும் சினிமாவின் நீடித்த சக்திக்கு ஐஎப்எப்ஐ ஒரு சான்றாக உள்ளது. கோவா மற்றொரு மறக்கமுடியாத பதிப்பை நடத்தத் தயாராகி வரும் நிலையில், நம்பிக்கை, படைப்பாற்றல் மற்றும் இன்னும் சொல்லப்படாத கதைகளில் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் திரைப்பட விழா எதிர்நோக்குகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2190314

***

SS/PVK/SH


(Release ID: 2190383) Visitor Counter : 5