சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியும் ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனையும் அம்ரித் மருந்தகங்களைக் கொண்டிருக்க வேண்டும்: மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜே பி நட்டா
Posted On:
15 NOV 2025 3:32PM by PIB Chennai
அம்ரித் (மலிவு விலை மருந்துகள் மற்றும் சிகிச்சைக்கான நம்பகமான கையிருப்புகள்) மருந்தகத்தின் 10 - வது ஆண்டு விழாவை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜே பி நட்டா இன்று புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி மலிவு விலையில் மருந்துகள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிப்பதுடன், உலகளவில் சுகாதாரப் பாதுகாப்பிற்கான பொதுத்துறையின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை அங்கீகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.
2015 - ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த அம்ரித் மருந்தகங்கள் 50% முதல் 90% வரை தள்ளுபடி விலையில் உயிர்காக்கும் மற்றும் அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளன. இது நோயாளிகளுக்கு, குறிப்பாக குறைந்த வருவாய் கொண்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளைக் கணிசமான அளவில் குறைத்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய திரு நட்டா, அம்ரித் மறுந்தகங்களை செயல்படுத்துவதில் எச்எல்எல் லைஃப்கேர் நிறுவனம் மேற்கொண்டு வரும் நிலையான மற்றும் உயர்தர முன் முயற்சிகளுக்கு பாராட்டுத் தெரிவித்தார். 2014 - ம் ஆண்டில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், அனைத்து குடிமக்களுக்கும் சுகாதாரப் பராமரிப்பு சேவைகள் எளிதில் கிடைக்கும் வகையிலும், மலிவு விலையில், சமஅளவில் மருந்துகள் கிடைக்கச் செய்வதில் உறுதியுடன் இருந்ததை அப்போது அவர் நினைவு கூர்ந்தார். இந்த தொலைநோக்குப் பார்வையுடன் மக்கள் மருந்தகங்கள் மற்றும் அம்ரித் மருந்தகங்கள் ஏற்படுத்தப்பட்டன. இவை இரண்டும் மலிவு விலையில் மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளன.
அம்ரித் மருந்தகம் வலுவான தேசிய அளவில் வளர்ச்சி கொண்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், தற்போது 255 - க்கும் அதிகமான மருந்தகங்கள் செயல்பாட்டில் உள்ளதாக தெரிவித்தார். இந்த கட்டமைப்பு நாடு முழுவதும் 500 விற்பனை நிலையங்களாக விரிவுபடுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். இன்று நாட்டில் உள்ள ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனைகளிலும் அம்ரித் மருந்தகம் இருந்த போதிலும், நாட்டில் உள்ள ஒவ்வொரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனையிலும் அம்ரித் மருந்தகம் இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார். இதனால் மலிவு விலையில் மருந்துகள் சுகாதார அமைப்பின் அனைத்து நிலைகளிலும் மக்களைச் சென்றடைய உதவுகின்றன.
அம்ரித் மருந்தகத்தின் சாதனைகளை எடுத்துரைத்த அவர், வர்த்தக முத்திரை கொண்ட மருந்துகளுக்கு 50 சதவீத தள்ளுபடி வழங்குவது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். இது 6.85 கோடிக்கும் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு பயனளிக்கிறது என்றும், இதுவரை 17,000 ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான மருந்துகள் அதிகபட்ச சில்லறை விலையில் விநியோகிக்கப்பட்டுள்ளன என்றும், இதன் விளைவாக நோயாளிகளுக்கு 8,500 கோடி ரூபாய் சேமிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் திரு ஜே பி நட்டா தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2190300
(Release ID: 2190300)
***
SS/SV/SH
(Release ID: 2190374)
Visitor Counter : 5