பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒரு கோடியைக் கடந்த டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரம் 4.0

Posted On: 14 NOV 2025 3:03PM by PIB Chennai

தற்போது நடைபெற்று வரும் நாடு தழுவிய டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் (டிஎல்சி) பிரச்சாரம் 4.0, ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. இந்தப் பிரச்சாரம்  2025 நவம்பர் 1 முதல் 30 வரை நாடு முழுவதும் 2,540 இடங்களை உள்ளடக்கிய 2000 நகரங்களில் நடத்தப்படுகிறது. 12.11.2025 நிலவரப்படி, 35,000-க்கும் மேற்பட்ட டிஎல்சி முகாம்கள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன, மேலும்  2025 நவம்பர் 30 தேதிக்குள் 75,000 கூடுதல் முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும்.

முக அங்கீகாரம் மூலம் 59,13,073 (58%) மற்றும் 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கான 7 லட்சம் டிஎல்சி-க்கள் உட்பட மொத்தம் 100 லட்சம் (1 கோடி) டிஎல்சி-க்கள்  இதுவரை உருவாக்கப்பட்டுள்ளன. இது வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி ஓய்வூதியதாரர்களுக்கு குறிப்பிடத்தக்க எளிமையையும் கண்ணியத்தையும் கொண்டு வந்துள்ளது.

மனதின் குரல் நிகழ்ச்சியின் 116-வது அத்தியாயத்தில் சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ளபடி, ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் அதிகாரமளித்தல் குறித்த பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை இந்தச் சாதனை  பிரதிபலிக்கிறது என்று மத்திய பணியாளர் நலத்துறை  இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். பயோமெட்ரிக் மற்றும் முக அங்கீகார தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் அரசு நீண்டகால சவாலை ஒரு வாய்ப்பாக மாற்றியுள்ளது என்று அவர் கூறினார்.

டிஎல்சி 4.0, டிஎல்சி 3.0-வை விட ஒரு கோடி மைல்கல்லை மிக முன்னதாகவே எட்டியுள்ளது, இது ஓய்வூதியதாரர்களிடையே விரைவான டிஜிட்டல் அணுகலைக் குறிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2189991

***

SS/PKV/AG/SH


(Release ID: 2190188) Visitor Counter : 7