PIB Headquarters
பழங்குடியினர் கௌரவ தினம் – இந்தியாவின் பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை
प्रविष्टि तिथि:
14 NOV 2025 12:08PM by PIB Chennai
பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரரும் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து போராடியவருமான பிர்சா முண்டாவின் பிறந்த தினத்தையொட்டி ஆண்டுதோறும் நவம்பர் 15-ம் தேதி பழங்குடியினர் கௌரவ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது 150-வது பிறந்த தினமாக இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஒரு ஆண்டுகால கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் நவம்பர் 1 முதல் 15-ம் தேதி வரை சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிர்சா முண்டாவின் தியாகம் மற்றும் போராட்டங்கள் மற்றும் பிற இந்திய பழங்குடியின தலைவர்களின் காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டங்களையும் கொண்டாடும் வகையிலும் நாட்டின் பன்முகத்தன்மையுடன் கூடிய பழங்குடியின கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் போற்றும் வகையிலும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
பழங்குடியின வரலாறு மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பழங்குடியின கௌரவ ஆண்டு நிகழ்ச்சிகளையொட்டி பல்வேறு பயிலரங்குகள் நிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சார செயல்பாடுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க பழங்குடியின சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை போற்றும் வகையில் 11 அருங்காட்சியகங்களை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2189915
***
SS/SV/KPG/SH
(रिलीज़ आईडी: 2190171)
आगंतुक पटल : 42