பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திரிசூல் முப்படைப் பயிற்சி 2025 நிறைவு

Posted On: 14 NOV 2025 12:46PM by PIB Chennai

திரிசூல் முப்படைப் பயிற்சி, இந்திய கடற்படை, இந்திய ராணுவம், இந்திய விமானப்படை ஆகியவை  இணைந்து நடத்தியது.

இந்திய கடற்படையின் மேற்கு கடற்படை கட்டளை, இந்திய ராணுவத்தின் தெற்கு கட்டளை, இந்திய விமானப்படையின் தென்மேற்கு விமான கட்டளை ஆகியவை இணைந்து இதில் கலந்து கொண்டன.

இந்தப் பயிற்சியில் ராஜஸ்தான் பாலைவனப் பகுதிகளிலும்,  குஜராத், வட அரபிக் கடல் பகுதியிலும் பெரிய அளவிலான நடவடிக்கைகள் இடம்பெற்றன. இந்திய கடலோர காவல்படை, எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் பிற மத்திய நிறுவனங்களும் இந்தப் பயிற்சியில் பங்கேற்று, நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை வலுப்படுத்தின.

ஆயுதப் படைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதும், மூன்று படைகளிலும்  பல-கள ஒருங்கிணைந்த செயல்பாட்டு நடைமுறைகளை சரிபார்த்து ஒத்திசைப்பதும் இதன் நோக்கமாகும். இந்தப் பயிற்சி கூட்டு உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் உளவுத்துறை நடைமுறைகள், மின்னணு போர் மற்றும் சைபர் போர் திட்டங்களையும் சரிபார்த்தது. சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்ளவும், விமான நடவடிக்கைகளுக்கான கூட்டு வழிமுறைகளைச் சரிபார்க்கவும் வசதிகள் செய்யப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2189935   

***

SS/PKV/AG/SH

 


(Release ID: 2190158) Visitor Counter : 11