சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அமிர்தசரஸில் நவம்பர் 18 அன்று போதைப்பொருள் ஒழிப்பு இயக்கம் ஐந்தாண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் தேசிய நிகழ்வு

Posted On: 14 NOV 2025 12:21PM by PIB Chennai

போதைப் பொருள் பயன்பாடு என்பது நாட்டின் சமூகக் கட்டமைப்பை மோசமான பாதிப்புகளை உருவாக்கும் பிரச்சனையாகும். இதற்குத் தீர்வு காணும் வகையில் தனிநபர்  ஆரோக்கியம் மட்டுமின்றி, அவர்களது குடும்ப நலன்களையும் சமூகத்தையும் சீர்குலைக்கிறது. நரம்பியல் சார்ந்த மனநலப் பாதிப்புகள், இருதய நோய்கள், அத்துடன் விபத்துகள், தற்கொலைகள் மற்றும் வன்முறைக்கு இது வழிவகுக்கும்.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தைக் குறைப்பதற்கான முக்கிய அமைச்சகமாகும், இது போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை, பயனர்களின் சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் தகவல்களைப் பரப்புதல் ஆகியவற்றின் அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்து கண்காணிக்கிறது.

போதைப்பொருள் ஒழிப்பு இயக்கத்தை இந்த அமைச்சகம்  தொடங்கி, தற்போது நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தி  வருகிறது. இதன் நோக்கம், இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டின்  தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழக வளாகங்கள், பள்ளிகள் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்துதல் ஆகியவற்றில் இது கவனம் செலுத்தி வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் ஏராளமான விழிப்புணர்வு உருவாக்கும் நடவடிக்கைகள் நடத்தப்படுகின்றன. போதைப்பொருள் இல்லாத இயக்கத்தின் ஐந்தாண்டுகளைக் கொண்டாடும் ஒரு பிரமாண்டமான  நிகழ்வு 2025 நவம்பர் 18-ம் தேதி அமிர்தசரஸில் உள்ள குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை  பஞ்சாப் ஆளுநர்சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ஆகியோர் வழிநடத்துவார்கள். இந்த நிகழ்வில் சுமார் 7000 பங்கேற்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2189923   

***

SS/PKV/AG/SH


(Release ID: 2190156) Visitor Counter : 4
Read this release in: English , Urdu , Kannada