பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
அசாமின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15-வது நிதிக்குழு மானியமாக 223 கோடி ரூபாய் விடுவிப்பு
Posted On:
14 NOV 2025 11:42AM by PIB Chennai
அசாம் மாநிலத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2025-26-ம் நிதியாண்டுக்கான 15-வது நிதிக்குழு மானியத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது. இது 2024-25-ம் நிதியாண்டுக்கான இரண்டாவது தவணை ஒருங்கிணைந்த மானியத் தொகையான 219.24 கோடி ரூபாயாகும். இந்த நிதி அம்மாநிலத்தில் உள்ள 27 பஞ்சாயத்து அமைப்புகள், 182 தொகுதி பஞ்சாயத்துகள் மற்றும் 2,192 கிராமப்புற பஞ்சாயத்து அமைப்புகளின் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். மேலும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2024-25-ம் நிதியாண்டுக்கான முதலாவது தவணை ஒருங்கிணைந்த மானியத் தொகையான 4,698 கோடி ரூபாயும் விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக 26 தொகுதி பஞ்சாயத்துகள் பயனடையும்.
மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் ஜல்சக்தி அமைச்சகத்தின் பரிந்துரையின்படி, 15-வது நிதிக்குழு மானியத்தொகை மாநிலங்களுக்கான பஞ்சாயத்து அமைப்புகள் மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய நிதியமைச்சகத்தால் விடுவிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு நிதியாண்டும் இரண்டு தவணைகளாக ஒதுக்கீடு செய்யப்பட்ட மானியத்தொகை பரிந்துரையின் பேரில் வழங்கப்பட்டு வருகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 11-வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 29 வகையான பணிகளுக்கு கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் திட்டங்களுக்காக பயன்படும் வகையில், ஒருங்கிணைந்த மானியமாக இந்த நிதி வழங்கப்படுகிறது. இதில் பஞ்சாயத்து அமைப்புகளின் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் இதரப்படிகளுக்கான செலவுகள் இடம் பெறாது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2189911
***
SS/SV/KPG/KR
(Release ID: 2190019)
Visitor Counter : 4