வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அரசின் மின்னணு சந்தை ஏற்பாடு செய்துள்ள திறன்மேம்பாட்டுப் பயிற்சியில் 23 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பு

Posted On: 14 NOV 2025 9:21AM by PIB Chennai

இந்திய தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பில் இடம் பெற்றுள்ள 23 கூட்டு நாடுகளின் பிரதிநிதிகள் அரசின் மின்னணு சந்தை ஏற்பாடு செய்துள்ள திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளனர்.  இந்த திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் அருண் ஜேட்லி தேசிய நிதி மேலாண்மை மையம் மற்றும் அரசின் மின்னணு சந்தை இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சர்வதேச ஒத்துழைப்புடன் கூடிய டிஜிட்டல் பொது கொள்முதல் நடவடிக்கைகளில் நவீன சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதைக் குறிக்கும் வகையில் இந்த முன்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எல்லைகளைக் கடந்து சீரான கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் திறன் மேம்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் தலைமைத்துவ பண்பை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியாவில் மின்னணு வாயிலான கொள்முதல் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உலக நாடுகள் புரிந்து கொள்ள ஏதுவாக  இந்த முன்முயற்சி அரசின் மின்னணு சந்தை மேற்கொண்டு வருகிறது. இது உலக அளவில் அரசின் கொள்முதல் செயல்பாடுகளை வெளிப்படையாகவும் திறன்படவும் தொழில்நுட்ப அடிப்படையிலும் மேற்கொள்ள உதவுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு கொள்முதல் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கான அம்சங்கள் குறித்தும் அதனை திறன்பட கையாள்வது குறித்தும் சமூக நடைமுறைகள், உலக அளவிலான செயல்பாடுகள், தலைமைத்துவப் பண்பு மற்றும் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கிறது.

கொள்முதல் நடவடிக்கைகளுக்கான சூழல் அமைப்பை கட்டமைப்பதுடன் அனைத்ததையும் உள்ளடக்கிய நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்ளச் செய்வதும் இந்த முன்முயற்சியின் நோக்கமாக அமைந்துள்ளது. வாங்குபவர்கள் மற்றும் விற்பனையாளர்களிடையே நேர்மையான, வெளிப்படையான, நம்பகத்தன்மையுடன் கூடிய ஆன்லைன் சந்தைகளுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கும் அதன் மூலம் பரஸ்பரம் அனைத்துத் தரப்பினரும் பயனடைவதை நோக்கமாகக் கொண்டும் இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்னணு வர்த்தக சந்தையின் தலைமைச் செயல் அதிகாரி திரு மிகிர் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2189887

***

SS/SV/KPG/KR


(Release ID: 2189934) Visitor Counter : 6