ஆயுஷ்
உலக நீரிழிவு தினத்தையொட்டி பெங்களூருவில் உள்ள மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் நாளை விவாதத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது
Posted On:
13 NOV 2025 3:33PM by PIB Chennai
உலக நீரிழிவு தினம் 2025-ஐயொட்டி பெங்களூருவில் உள்ள ஆயுஷ் அமைச்சகத்தின் மத்திய ஆயுர்வேத நிறுவனம் 2025 நவம்பர் 14 அன்று நீரிழிவு குறித்த சிறப்பு விவாதத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. நீரிழிவு நோய்த் தடுப்புக்கான ஆராய்ச்சி, சேவை உள்ளிட்ட முயற்சிகள் குறித்து இந்நிகழ்வில் எடுத்துரைக்கப்பட உள்ளது. ஆயுர்வேதம், யோகா மற்றும் வாழ்க்கை முறையின் மூலம் நீரிழிவு நோயைத் தடுப்பது மற்றும் எதிர்கொள்வதற்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை அமல்படுத்துவதில் இம்மையம் கவனம் செலுத்துகிறது. இந்த மையத்தின் தேவைகள் மூலம் சுமார் 6,000 நோயாளிகள் பயன் பெற்றுள்ளனர். இதில் 25 சதவீதம் பேர் பொருளாதார ரீதியாக நலிவடைந்தோர் ஆவர்.
நாளை நடைபெறும் நிகழ்வில் ராமையா இண்டிக் சிறப்பு ஆயுர்வேத மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் ஜி ஜி கங்காதரன், நீரிழிவு குறித்த மேலாண்மை தொடர்பாக உரையாற்றவுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2189633
***
SS/IR/KPG/SE
(Release ID: 2189796)
Visitor Counter : 6