சுரங்கங்கள் அமைச்சகம்
புதுதில்லியில் இந்திய வர்த்தக கண்காட்சியில் நவம்பர் 14 அன்று சுரங்க அமைச்சகத்தின் அரங்கை மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி திறந்து வைக்கிறார்
Posted On:
13 NOV 2025 1:26PM by PIB Chennai
புதுதில்லி பிரகதி மைதானத்தில் 2025 நவம்பர் 14 அன்று இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2025-ல் சுரங்க அமைச்சகத்தின் அரங்கை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி, திறந்து வைக்கவுள்ளார். இந்த அரங்கம் வளர்ச்சியடைந்த இந்தியா – ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதை கட்டமைப்பதையொட்டிய பங்களிப்பு, இந்தியாவின் வளமான கனிம வளங்கள், தொழில்நுட்ப மேம்பாடுகள் ஆகியவற்றை விளக்கக் கூடியதாகவும், 1,500 சதுரமீட்டர் பரப்பளவில் அமைக்கப்படும் இந்த அரங்கில் உரையாடல் நிகழ்வுகள் மற்றும் இந்தியாவின் சுரங்கம் மற்றும் கனிம வளத்துறையின் சாதனைகள் குறித்து எடுத்துரைக்கும் விளக்கக் காட்சிகள் இடம் பெறும். தேசிய அலுமினிய நிறுவனம், இந்துஸ்தான் தாமிர நிறுவனம், புவியியல் ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட அமைச்சகத்தின் சார்பு நிறுவனங்களும் தன்னாட்சி அமைப்புகளும், மத்தியப் பொதுத்துறை நிறுவனங்களும் இந்த அரங்கில் பங்கேற்கின்றன.
ஹிண்டல்கோ தொழில்துறை நிறுவனம், இந்துஸ்தான் துத்தநாகம் நிறுவனம் போன்ற தனியார் துறையினரும் இதில் பங்கேற்று தங்களுடைய புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் பங்களிப்புகளை விளக்க உள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2189575
***
SS/IR/KPG/KR
(Release ID: 2189693)
Visitor Counter : 5