நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நான்கு மாத கால நாடு தழுவிய நிதி சேர்க்கை செறிவு பிரச்சாரத்தை நிதி சேவைகள் துறை வெற்றிகரமாக நிறைவு செய்தது

Posted On: 10 NOV 2025 8:11PM by PIB Chennai

ஜூலை 1, 2025 அன்று தொடங்கப்பட்ட நான்கு மாதகால (ஜூலை-அக்டோபர்) நாடு தழுவிய நிதி சேர்க்கை செறிவு பிரச்சாரத்தை நிதி சேவைகள் துறை வெற்றிகரமாக நிறைவு செய்தது. தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனையும் முக்கிய நிதித் திட்டங்களின் வரம்பிற்குள் கொண்டுவருவதே இதன் நோக்கமாகும். நிதி சேர்க்கை அளவுருக்களில் கணிசமான முன்னேற்றத்தை பிரதிபலிக்கும் வகையில், இந்தப் பிரச்சாரம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது.

 

பிரதமரின் மக்கள் வங்கிக் கணக்குத் திட்டம், பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம், பிரதமரின் விபத்து காப்பீட்டுத் திட்டம் மற்றும் அடல் ஓய்வூதிய திட்டம் போன்ற முதன்மைத் திட்டங்களுக்கான அணுகல் மற்றும் அனைத்து 2.70 லட்சம் கிராம பஞ்சாயத்துகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை சென்றடைவதை உறுதி செய்வது  இதன் முதன்மை நோக்கமாகும். பதிவுகளை எளிதாக்குவதற்கும், செயலற்ற கணக்குகளுக்கான மறு கே.ஒய்.சி, நியமன புதுப்பிப்புகளை எளிதாக்குவதற்கும் நாடு முழுவதும் முகாம்கள் நடத்தப்பட்டன. இது டிஜிட்டல் மோசடிகள், உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகள் மற்றும் குறை தீர்க்கும் நடவடிக்கைகள் குறித்த நிதி கல்வியறிவையும் மேம்படுத்தியது.

 

கிராமங்கள் மற்றும் நகரங்களில் மொத்தம் 2,67,345 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதன் விளைவாக அக்டோபர் 31 வரை 1.11 கோடி மக்கள் வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டன, காப்பீட்டுத் திட்டங்களுக்கு 92,066 உரிமைகள் கோரப்பட்டன.

 

இந்திய அரசு, அடிமட்ட அளவில் நிதி அணுகலை வலுப்படுத்துவதன் மூலமும், நாட்டின் நிதி அதிகாரமளிப்பு முயற்சிகளிலிருந்து ஒவ்வொரு குடிமகனும் பயனடைவதை உறுதி செய்வதற்காக அனைத்து பங்குதாரர்களின் தீவிர ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலமும் உள்ளடக்கிய வளர்ச்சியைத் தொடர்ந்து இயக்கி வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188526

***

 

(Release ID: 2188526)

SS/BR/KR


(Release ID: 2188615) Visitor Counter : 5