பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்புத்துறைக்கான பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடு குறித்து பாதுகாப்பு அமைச்சர் ஆய்வு செய்தார்
Posted On:
10 NOV 2025 2:35PM by PIB Chennai
புதுதில்லியில் நவ்ரோஜி நகர், உலக வர்த்தக மையத்தில் புதிதாக கட்டப்பட்ட பாதுகாப்புத்துறைக்கான பொதுத்துறை நிறுவனங்கள் (டிபிஎஸ்யூ) பவனில் 2025 நவம்பர் 10 அன்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்தார். இந்தக் கூட்டத்தில் எம்ஐஎல், ஏவிஎன்எல், ஐஓஎல், எச்எஸ்எல் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய திரு ராஜ்நாத் சிங், நாட்டின் தற்சார்புக்காக 16 பாதுகாப்புத்துறைக்கான பொதுத்துறை நிறுவனங்களும் வலுவான தூண்களாக செயல்படுவதாக பாராட்டு தெரிவித்தார். 2024-25-ல் பாதுகாப்பு தளவாடங்களின் உற்பத்தி மதிப்பு ரூ.1.51 லட்சம் கோடியை எட்டியுள்ளது என்றும் இவற்றில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பு 71.6 சதவீதம் என்றும் அவர் கூறினார். இந்தியாவில் உள்நாட்டு தயாரிப்புகளில் நம்பிக்கை கொண்டுள்ளதால் உலகளாவிய பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி ரூ. 6,695 கோடியை எட்டியுள்ளது என்று திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
பொதுத்துறை நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அமைச்சர், தேவைப்படும் சிறப்பு தலையீடு அல்லது உதவி அரசால் நிச்சயம் செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188306
***
SS/SMB/AG/SH
(Release ID: 2188500)
Visitor Counter : 6