இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
அமிர்த தலைமுறை என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை 2026-க்கான இளையோர் போட்டியில் பங்கேற்பை அதிகரித்துள்ளது
प्रविष्टि तिथि:
10 NOV 2025 3:29PM by PIB Chennai
அமிர்த தலைமுறை என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை 2026-க்கான இளையோர் போட்டியில் பங்கேற்பை அதிகரித்துள்ளது. மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மிகமுக்கிய முன் முயற்சியான, வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் உரையாடல் என்ற போட்டியில் பங்கேற்பதற்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் முன்வந்துள்ளனர்.
மைபாரத், மைகவ் தளங்களில் 2025 செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 31 வரை 2026-ம் ஆண்டுக்கான விநாடி-வினா போட்டியில் பங்கேற்க 50.42 லட்சம் இளைஞர்கள் பதிவு செய்திருந்தனர். இது ஏற்கனவே நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்ற 30 லட்சம் பேர் என்ற எண்ணிக்கையைக் கடந்துள்ளது. தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஹரியானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் அதிக எண்ணிக்கை கொண்ட பங்கேற்பாளர்களில் முதல் ஐந்து இடத்தை பெற்றுள்ளன.
2-ம் கட்டமான கட்டுரை சுற்றுக்கு சுமார் 2.56 லட்சம் இளைஞர்களை கொண்ட சுருக்கப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கட்டுரை எழுதுவதற்கு 10 தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கட்டுரைகளை 22 இந்திய மொழிகளில் எந்த ஒரு மொழியிலும் எழுதலாம். இந்தக் கட்டுரைகள் 2025 நவம்பர் 20 வரை ஏற்கப்படும். நியாயமான, வெளிப்படையான மதிப்பீட்டை உறுதிசெய்வதற்காக அனைத்து மாநிலங்களிலும் மதிப்பீட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான சுற்றுகளுக்கு தெரிவு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188330
***
SS/SMB/AG/SH
(रिलीज़ आईडी: 2188498)
आगंतुक पटल : 24