நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
மின்னணு வர்த்தகத் தளங்களில் பொருட்களின் விவரங்களை கண்டறிவதற்கான அம்சத்தில் உற்பத்தி செய்யப்பட்ட நாட்டின் பெயர் கட்டாயம் இடம்பெற வேண்டும்- நுகர்வோர் விவகாரங்கள் துறை
प्रविष्टि तिथि:
10 NOV 2025 4:16PM by PIB Chennai
மின்னணு வர்த்தகத் தளங்களில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் குறித்த விவரங்களை கண்டறிவது மற்றும் வரிசைப்படுத்துவதற்கான அம்சங்களில், அந்தப் பொருள் உற்பத்தி செய்யப்பட்ட நாட்டின் பெயர் இடம்பெறச் செய்வதை கட்டாயமாக்கும் முன்மொழிவு குறித்த வரைவு அறிக்கையை, மத்திய நுகர்வோர் விவகாரத்துறை வெளியிட்டுள்ளது. இது ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் பேக்கிங் செய்யப்பட்ட அனைத்து பொருட்களுக்கும் பொருந்தும். இது ஆன்லைன் விற்பனையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நுகர்வோரின் அதிகாரமளித்தல் நடவடிக்கைகளை மேம்படுத்த உதவிடும்.
ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குவதற்காக நுகர்வோர் எளிதில் அடையாளம் காணும் வகையில், அது உற்பத்தி செய்யப்பட்ட நாட்டின் பெயரை குறிப்பிடுவதன் மூலம், நுகர்வோர் அதனை வாங்குவது குறித்து முடிவு செய்வதற்கான அதிகாரத்தை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதன்மூலம் வாடிக்கையாளர்கள் பொருட்கள் குறித்த விவரங்களை எளிதாக கண்டறிவதுடன், அதனை உற்பத்தி செய்த நாடுகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தவும் உதவிடும். மேலும் இது வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதுடன், பல்வேறு பொருட்கள் குறித்த விவரங்கள் அடங்கிய தகவல் தொகுப்பில் இருந்து தேவையான பொருட்களின் விவரங்களை கண்டறிவதற்கான நேரமும் வெகுவாக குறையும்.
சட்டப்பூர்வ அளவியல் (பேக்கிங் செய்யப்பட்ட) விதிமுறைகள் 2011- ல் விதி 6-ல் துணை விதி 10- ன் கீழ் ஆன்லைன் வர்த்தக தளங்களில் பட்டியலிடப்பட்ட பொருட்களை அடையாளம் காண்பதற்கான தேடுதல் மற்றும் வரிசைப்படுத்துதல் நடவடிக்கைகளில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் பொருட்களின் உற்பத்தி செய்யப்பட்ட நாட்டின் விவரங்களை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188363
***
SS/SV/LDN/SH
(रिलीज़ आईडी: 2188487)
आगंतुक पटल : 12