உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த இரண்டு நாள் தேசிய மாநாடு போபாலில் நடைபெற்றது

Posted On: 09 NOV 2025 6:27PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சகமும், போபாலில் உள்ள தேசிய நீதித்துறைக் கழகமும்  இணைந்து 2025 நவம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த இரண்டு நாள் தேசிய மாநாட்டை போபாலில் நடத்தின. இந்த மாநாட்டில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலிருந்தும் 120 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

 மாநாட்டில் உரையாற்றிய மத்திய உள்துறை செயலாளர் திரு கோவிந்த் மோகன், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு பாதுகாப்பான, வெளிப்படையான, ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட குற்றவியல் நீதி முறையை உருவாக்கி வருவதாகக் கூறினார். மத்திய உள்துறை அமைச்சர்

திரு அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழ், நாடு விரைவான நீதிக்கான புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். புதிய குற்றவியல் சட்டங்கள் இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பை காலனித்துவத்திலிருந்து விடுவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்டதாகவும், தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டதாகவும் இந்தச் சட்டங்கள் உள்ளன என்று அவர் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் வழக்குகள் குறித்த ஆய்வுகள், கலந்துரையாடல் அமர்வுகள், சட்ட வல்லுநர்களின் உரை, உள்ளிட்டவை இடம்பெற்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188068

***

(Release ID: 2188068)

SS/PLM/RJ


(Release ID: 2188103) Visitor Counter : 8