மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
டிஜிலாக்கர் செயலி மக்கள், அரசுத் துறைகள் என அனைத்தையும் இணைப்பதுடன், பாதுகாப்பான, பொறுப்புணர்வுடன் கூடிய டிஜிட்டல் நிர்வாக நடைமுறைகளை செயல்படுத்துகிறது - மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
प्रविष्टि तिथि:
08 NOV 2025 9:29AM by PIB Chennai
‘டிஜிலாக்கர் செயலி அனைவருக்கும் காகிதப் பயன்பாடற்ற அணுகலை உருவாக்குதல்’ என்ற தேசிய மாநாடு இந்த வாரம் புதுதில்லியில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் மூத்த அரசு அதிகாரிகள், தொழில்நுட்பம் மற்றும் நிதித் துறைகளைச் சேர்ந்த தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் துறைசார்ந்த வல்லுநர்கள் கலந்து கொண்டனர். டிஜிலாக்கர் செயலி காகிதப் பயன்பாடற்ற நிர்வாக நடைமுறைகளை உருவாக்க வகை செய்வதுடன், உள்ளடக்கிய கல்வி, பாதுகாப்பான டிஜிட்டல் சேவைகள் போன்றவற்றின் செயல்பாடுகளை எளிதாக்குவதில் அளித்து வரும் பங்களிப்பு குறித்தும் இந்த மாநாடு எடுத்து காட்டுகிறது. இது நாட்டின் தற்போதைய டிஜிட்டல் நடைமுறைகள் சார்ந்த தளத்தை உருவாக்குவதற்கான முக்கிய நடவடிக்கையாகும்.
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய மின்-ஆளுமைப் பிரிவு ஏற்பாடு செய்திருந்தது. டிஜிலாக்கர் செயலி எளிய, பாதுகாப்பான முறையில் ஆவணங்களை சேமித்து வைக்கும் வசதிகளுடன் அரசு, கல்வி மற்றும் தொழில்துறையில் நம்பிக்கை, வசதி மற்றும் செயல்திறனின் முக்கிய அங்கமாக எவ்வாறு உருவாகி வருகிறது என்பது குறித்து விவாதிக்கவும், காட்சிப்படுத்தவும் ஒரு கூட்டு முயற்சியை மேற்கொள்வதற்கான தளத்தை வழங்கியுள்ளது.
மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகச் செயலாளர் திரு எஸ் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் உரையாற்றிய அவர், இந்தியாவின் டிஜிட்டல் நடவடிக்கைகள் தகவல் தொடர்பிற்கான இணைப்பிலிருந்து, தற்போது நிர்வாக நடைமுறைகளுக்கான புதிய உள்கட்டமைப்பு வசதிகளையும் உருவாகி வருகிறது என்று எடுத்துரைத்தார். "டிஜிலாக்கர் மக்கள், அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளை இணைக்கும் நம்பிக்கை சார்ந்த அங்கமாக செயல்படுவதுடன், பாதுகாப்பான, ஒன்றோடொன்று சார்ந்து இயங்கக்கூடிய மற்றும் பொறுப்புணர்வுடன் கூடிய டிஜிட்டல் நிர்வாகத் தளத்தையும் செயல்படுத்துகிறது என்று அவர் தெரிவித்தார். டிஜிலாக்கர் தளத்தை நம்பகத்தன்மை கொண்ட தலமாகவும், மக்களுக்கு பயனுள்ளதாகவும்,பொறுப்புணர்வுடன் செயல்படும் தளமாகவும் உருவாக்குவதே அரசின் தொலைநோக்குப் பார்வையாக உள்ளது என்று அவர் உறுதிப்படுத்த தெரிவித்தார்."
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2187686
***
AD/SV/RJ
(रिलीज़ आईडी: 2187799)
आगंतुक पटल : 26