குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

உயர்கல்வியில் உலகத்தரத்துடன் இந்திய கல்வி நிறுவனங்கள் முன்னேற்றம் கண்டு வருகின்றன– குடியரசு துணைத்தலைவர் சி பி ராதாகிருஷ்ணன்

Posted On: 07 NOV 2025 5:59PM by PIB Chennai

பட்டப்படிப்பு என்பது மாணவர்களுக்கு கல்வித்துறையில் சாதனைகளாக இருப்பது மட்டுமின்றி, ஒழுக்கம், மதிப்பு மற்றும் நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய அம்சமாக இருக்க வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

தில்லியில் உள்ள எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் 3-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டிகளாக இருப்பதற்கு பாராட்டுத் தெரிவித்தார். மாணவர்கள் தற்போது படைத்து வரும் சாதனைகளில் அவர்களது அயராத உழைப்பு, வழிகாட்டுதல், ஆகியவை பிரதிபலிப்பதாக கூறினார்.

தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் சிறந்த கல்வியும் அமைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், அதைவிட முக்கியமாக  குணநலன் மற்றும் பண்புகள் போன்ற மாண்புகளை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று  அவர் கேட்டுக் கொண்டார். ஒழுக்கம் மற்றும் சிறந்த பழக்க வழக்கங்களை வளர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் உலக அளவில் சிறப்பாக செயல்பட்டு சாதனைகள் படைத்து வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதென்று அவர் தெரிவித்தார். உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பான சர்வதேச தரப்பட்டியலில் 54 பல்கலைக்கழகங்களுடன் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளதென்று அவர் பெருமிதம் தெரிவித்தார்

மாணவர்கள்த ங்களது பெற்றோரை எப்போதும் நினைவில் வைத்திருப்பதுடன், வாழ்நாள் முழுவதும் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் உழைத்த அவர்களது தியாகங்களுக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2187462 *

***

AD/SV/KPG/RJ


(Release ID: 2187599) Visitor Counter : 4