விவசாயத்துறை அமைச்சகம்
மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்திற்கு மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் நாளை செல்கிறார்
Posted On:
06 NOV 2025 3:38PM by PIB Chennai
மத்திய வேளாண், விவசாயிகள் நலன் மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் ஒருநாள் பயணமாக மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டம் மற்றும் அதையொட்டிய ஊரகப்பகுதிகளுக்கு 2025 நவம்பர் 07 அன்று செல்கிறார்.
இப்பயணத்தின் போது மத்திய அமைச்சர் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு திட்டங்களின் அமலாக்கம் குறித்து ஆய்வு செய்கிறார். உள்ளூர் விவசாயிகளுடன் உரையாடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலவும் சூழலை பார்வையிடுகிறார். காலையில் தில்லியிலிருந்து விமானத்தில் புறப்படும் திரு சௌகான், சத்ரபதி சம்பாஜிநகருக்கு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிர்சலா சென்று கிரிஷிகுல் நிறுவனத்தில் ருத்ராபிஷேகம் மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
அந்நிறுவனத்தில் உள்ள பல்வேறு வசதிகளை ஆய்வு செய்யும் அவர், நலத்திட்டங்கள் முறையாக அமல்படுத்துவது குறித்து அங்குள்ள மக்களுடனும், விவசாயிகளுடனும் உரையாடவுள்ளார். பிற்பகலில் அரண்பூர் கிராமம் செல்லும் அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சாலைப்பாலத்தை ஆய்வு செய்கிறார். அதைத் தொடர்ந்து தபோவான் கிராமம் செல்லும் அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயிர் இழப்புகள் மற்றும் இதர சேதங்கள் குறித்து மதிப்பீடு செய்கிறார். நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் ஊரகப்பகுதி மக்களுடன் நேரடியாக உரையாடும் மத்திய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சரின் மாநில அளவிலான பயணங்களின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2186940
***
SS/IR/AG/SH
(Release ID: 2187119)
Visitor Counter : 3