வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

லத்தீன் அமெரிக்க நாடுகளுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் வலுவடைந்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது

Posted On: 06 NOV 2025 8:40AM by PIB Chennai

லத்தீன் அமெரிக்க நாடுகளுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் இரண்டு சுற்றுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது என இந்தியா தெரிவித்துள்ளது. இப்பிராந்தியத்தில் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கும், பொருளாதார ஒத்துழைப்பை  விரிவாக்குவதற்கும் இந்தியா உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

லத்தீன் அமெரிக்க நாடான பெருவில் உள்ள லிமா நகரில் இந்தியா – பெரு இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான 9-வது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இம்மாதம் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நடைபெற்றது. சரக்கு மற்றும் சேவைகள், உற்பத்தியாகும் பகுதிகளில் உள்ள விதிமுறைகள், வர்த்தகத் தொழில்நுட்பத் தடைகள், சுங்க நடைமுறைகள், வர்த்தக தகராறுகளுக்கு  தீர்வுகள் மற்றும் அரிய வகை கனிம வளங்கள் உட்பட  வர்த்தக ஒப்பந்தத்தில் இடம் பெறும் முக்கிய அம்சங்கள் குறித்த விவாதங்கள் இதில் இடம் பெற்றன.

இந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளைக் குறித்த நேரத்தில் இறுதி செய்வதில் பெரு உறுதியுடன் உள்ளதாக அந்நாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் திரு கோம்ஸ் தெரிவித்துள்ளார். இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதாரம் மற்றும் வர்த்தக வாய்ப்புகள் மேம்படுவதுடன், முதலீடுகளும் அதிகரிக்கும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். இது தொடர்பாக கருத்துத்  தெரிவித்துள்ள பெரு நாட்டிற்கான இந்திய தூதர் திரு சப்கல், இந்தியாவின் நீடித்த வளர்ச்சி மற்றும் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கு இந்த வர்த்தக ஒப்பந்தம் உதவிடும் என்று கூறினார்.  அரிய வகை கனிமங்கள், மருந்துகள், வாகனங்கள், ஜவுளிகள் மற்றும் உணவுப் பதப்படுத்துதல் போன்ற துறைகளில் புதிய வாய்ப்புகள் உருவாகும் என்று அவர் கூறினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2186809

***

SS/SV/KPG/KR


(Release ID: 2186868) Visitor Counter : 12