மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவைப் பாதுகாப்பாக, உள்ளடக்கிய முறையில் பொறுப்புடன் ஏற்றுக்கொள்வதை உறுதி செய்ய ஏஐ ஆளுகை வழிகாட்டுதல்கள் வெளியிடபட்டுள்ளன

प्रविष्टि तिथि: 05 NOV 2025 2:34PM by PIB Chennai

இந்தியா ஏஐ இயக்கத்தின் கீழ் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இன்று (05 நவம்பர் 2025) இந்திய செயற்கை நுண்ணறிவு ஆளுகை வழிகாட்டுதல்களை வெளியிட்டது, இது பல்வேறு துறைகளில் பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் பொறுப்பான செயற்கை நுண்ணறிவு ஏற்பை உறுதி செய்வதற்கான ஒரு விரிவான கட்டமைப்பாகும்.

இந்த வழிகாட்டுதல்களை மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலாளர் திரு  எஸ். கிருஷ்ணன்; கூடுதல் செயலாளரும்,  இந்தியா ஏஐ இயக்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு அபிஷேக் சிங், ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்பட்டன.

இந்தியா-ஏஐ தாக்க உச்சி மாநாடு 2026-க்கு முன்னதாக இந்த வெளியீடு ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது, ஏனெனில் இந்தியா பொறுப்பான ஏஐ நிர்வாகத்தில் அதன் தலைமையை வலுப்படுத்துகிறது.

அதிநவீன கண்டுபிடிப்புகளை வளர்ப்பதற்கும், தனிநபர்களுக்கும் சமூகத்திற்கும் ஏற்படும் அபாயங்களைக் குறைத்து அனைவருக்கும் பாதுகாப்பாக ஏஐ உருவாக்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் ஒரு வலுவான நிர்வாகக் கட்டமைப்பை இந்த வழிகாட்டுதல்கள் முன்மொழிகின்றன. இந்த கட்டமைப்பில் நான்கு முக்கிய கூறுகள் உள்ளன:

மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட் பேசுகையில், இந்தக் கட்டமைப்பின் நோக்கத்தை வரையறுக்கும் வழிகாட்டும் கொள்கை எளிமையானது என்றார். புத்தாக்க சோதனைக்கான மணல் பெட்டிகளை உருவாக்குவதில் மற்றும் நெகிழ்வான, தகவமைப்பிற்குள் ஆபத்து குறைப்பை உறுதி செய்வதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இந்தியா ஏஐ இயக்கம் இந்தச் சூழல் அமைப்பை செயல்படுத்தி பல நாடுகளுக்கு, குறிப்பாக உலகளாவிய தெற்கு முழுவதும் ஊக்கமளிக்கும் என்றும் அவர் கூறினார்.

சென்னை ஐஐடி பேராசிரியர் பலராமன் ரவீந்திரன் தலைமையில் ஓர் உயர்நிலைக் குழுவால் வரைவு செய்யப்பட்டுள்ளன.

கூடுதலாக, இந்தியப் புவியியல் ஆய்வு மையம், சுரங்க அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த இந்தியா ஏஐ  ஹேக்கத்தான் வெற்றியாளர்களும் அறிவிக்கப்பட்டனர். முதல் பரிசு ரூ.10 லட்சம், இரண்டாம் பரிசு ரூ. 7 லட்சம் மூன்றாம் பரிசு ரூ.5  லட்சம் சிறப்புப் பரிசு ரூ. 5 லட்சம் ஆகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2186639

****

AD/SMB/SH


(रिलीज़ आईडी: 2186733) आगंतुक पटल : 42
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Malayalam