குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
நவ ராய்ப்பூர் மற்றும் ராஜ்நந்த்கன் இடங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், சத்தீஷ்கர் மாநிலம் செல்கிறார்
Posted On:
04 NOV 2025 4:01PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவராக பொறுப்பேற்ற பிறகு திரு சி பி ராதாகிருஷ்ணன் சத்தீஸ்கர் மாநிலம் செல்கிறார். அவரது இந்தப் பயணத்தின் போது நவ ராய்ப்பூர் மற்றும் ராஜ்நந்த்கன் போன்ற இடங்களில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில், அம்மாநில உதயதின கொண்டாட்ட நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கிறார்.
கேரளா, தமிழ்நாடு மாநிலங்களில் தனது பயணத்தை முடித்துக் கொண்டு சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூருக்கு இன்று மாலை வருகிறார்.
ராய்ப்பூரில் உள்ள ஆளுநர் மாளிகையில், குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கபடுகிறது. இதனையடுத்து அவர், நவ ராய்ப்பூரில் உள்ள செந்த் ஏரிப்பகுதியில் இந்திய விமானப் படையின் சூரியகிரண் விமான சாகசக் குழு நடத்தும் வான் சாகசத்தையும் அவர் பார்வையிடுகிறார். 1996-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சூரியகிரண் வான்சாகசக் குழு குறிப்பிடத்தக்க விமான சாகசங்களையும் துல்லியமாக விமானங்களைச் செலுத்துவதில் திறமையானவர்கள் ஆவர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2186248
***
AD/IR/KPG/RJ
(Release ID: 2186419)
Visitor Counter : 6