குடியரசுத் தலைவர் செயலகம்
கல்வி கற்ற மாணவர்கள் விளிம்புநிலை மக்களுக்காக சேவையாற்ற வேண்டும்- குடியரசுத்தலைவர்
प्रविष्टि तिथि:
04 NOV 2025 1:42PM by PIB Chennai
உத்தராகண்ட் மாநிலம் நைனிடாலில் உள்ள குமான் பல்கலைக்கழகத்தின் 20-ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில், குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், எந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கும் அடித்தளமாக கல்வி திகழ்கிறது என்று குறிப்பிட்டார். அதனால், மாணவர்களின் அறிவுசார் மற்றும் திறன்களை மேம்படுத்துவது மட்டுமின்றி அவர்களுடைய நடத்தையையும் வலுப்படுத்த வேண்டும் என்று கூறினார். கல்வி என்பது நம்மை தற்சார்புடையதாக ஆக்குவது மட்டுமின்றி எளிமையாக இருப்பதற்கும் சமூகம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க கற்பிப்பதாகத் தெரிவித்தார். தாங்கள் கற்ற கல்வியை நாட்டின் கட்டமைப்பிற்காக விளிம்பு நிலை மக்களுக்கு சேவையாற்றி அர்ப்பணிக்க வேண்டும் என்று மாணவர்களை அவர் வலியுறுத்தினார்.
இந்தியப் பொருளாதாரம் உலகில் மிக விரைவாக வளர்ந்து வரும் பொருளாதாரம் என்று குடியரசுத்தலைவர் கூறினார். இது தொடர்ந்து வளர்ச்சியடைய பல்வேறு கொள்கை முன்முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். இந்த முன் முயற்சிகள் இளைஞர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்தார். இளைஞர்களை ஊக்குவிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உயர் கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அதன் மூலம் அவர்கள் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும் என்று குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2186178
***
AD/IR/KPG/AG
(रिलीज़ आईडी: 2186330)
आगंतुक पटल : 39