தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அஞ்சல்துறை தூய்மை இயக்கம் 5.O பணிகளை வெற்றிகரமாக நடத்தியது

Posted On: 03 NOV 2025 1:35PM by PIB Chennai

தகவல் தொடர்பு அமைச்சகத்தின் அஞ்சல் துறை சிறப்பு இயக்கம் 5.O-ன் பணிகளை நாடு முழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் உற்சாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் வெற்றிகரமாக நடத்தியது.

இந்த இயக்கத்தின்போது ஒரு லட்சம் பொதுமக்களின் குறைகளுக்கும், ஆயிரம் பொதுமக்களின் குறைகளின் மேல்முறையீட்டு மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது. தேவையில்லாத பழைய பொருட்களை அகற்றியதின் மூலம் ரூ.57.77 லட்சம் வருவாய் கிடைத்தது. தூய்மைப் பணிகள் மூலம் 23,287 சதுரஅடி பரப்பளவிலான இடம் விடுவிக்கப்பட்டது. நாடு முழுவதும் 1.30 லட்சம் தூய்மை இயக்கங்கள் நடத்தப்பட்டன.

நேரடியாக ஆன்லைன் வழி புகார் பதிவு செய்ய அஞ்சல் அலுவலகங்களில் கியூ.ஆர். கோடு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. துறைகளுக்கு விரைவில் தீர்வுகாண ஒவ்வொரு வாரமும் உயரதிகாரிகள், 10 குறை தீர்ப்பு பணிகளை கண்காணிப்பது என முடிவு செய்யப்பட்டது.

சென்னையில் உள்ள தமிழ்நாடு வட்ட முதன்மை தலைமை அஞ்சல் அதிகாரி அலுவலகத்தில், ஊழியர்களின் குழந்தைகளை பராமரிப்பதற்காக “தளிர்நிலம்” என்ற பெயரில் காப்பகம் துவங்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2185787

***

AD/IR/LDN/SH


(Release ID: 2185968) Visitor Counter : 8