வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
அசாம் மாநிலத்தில் ரூ.635 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா அடிக்கல் நாட்டினார்
प्रविष्टि तिथि:
03 NOV 2025 11:38AM by PIB Chennai
குவஹாத்தி ஐ.ஐ.டி.யில் வடகிழக்கு அறிவியில் மற்றும் தொழில்நுட்ப தொகுப்பை வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா இன்று தொடங்கி வைத்தார். அசாம் மாநிலத்தில் ரூ.635 கோடி மதிப்பிலான மாற்றத்தக்க மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் அசாம் மாநில அரசு உயரதிகாரிகள், கல்வி நிறுவன பிரதிநிதிகள், அறிவியில் மற்றும் தொழில்முனைவு சமூக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு சிந்தியா, தொடர்ச்சி, துணிச்சல் மற்றும் படைப்பாற்றலின் அடையாளமாக வலிமைமிக்க பிரம்மபுத்திரா பாயும் இடத்தில், வளர்ந்துவரும் வடகிழக்கு பிராந்தியத்தின் இதயத் துடிப்பாக அசாம் திகழ்கிறது என்று குறிப்பிட்டார்.
நாட்டின் கிழக்கு மறுமலர்ச்சிக்கான நீண்ட நுழைவாயிலாக இருந்த அசாம், தற்போது ஒரு வளர்ச்சியடைந்த வடகிழக்கு பகுதியின் புதுமைக் கண்டுபிடிப்புகள் மற்றும் இணைப்பு மையமாக வளர்ந்து வருகிறது என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2185710
***
AD/IR/LDN/RJ
(रिलीज़ आईडी: 2185775)
आगंतुक पटल : 31