பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
பழங்குடியினர் கௌரவ ஆண்டு" இருவார விழா நாடு முழுவதும் உற்சாகமாக தொடங்கியது
Posted On:
02 NOV 2025 5:28PM by PIB Chennai
பழங்குடியினச் சமூகத்தின் வீரம், தொலைநோக்குப் பார்வை மற்றும் பங்களிப்புகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் "பழங்குடியினர் பெருமை ஆண்டு" இருவார விழா (2025 நவம்பர் 1 முதல் 15 வரை) நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கியது.
காலனித்துவ அடக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பின் நீடித்த சின்னமாகத் திகழும், இந்தியாவின் மிகவும் போற்றப்படும் பழங்குடியினச் சுதந்திரப் போராட்ட வீரரான பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாளைக் குறிக்கும் ஓராண்டு கால "பழங்குடியினர் பெருமை ஆண்டு" கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த இரு வார விழா அமைகிறது.
இந்தியப் பழங்குடியினச் சமூகங்களின் தியாகங்கள், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கவுரவிக்கவும், அவர்களின் தைரியம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் உள்ள பங்களிப்பு ஆகியவற்றைத் தேசிய உணர்வுக்குக் கொண்டு வரவும் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் "பழங்குடியினர் பெருமை ஆண்டு" கடைபிடிக்கப்படுவதாக அறிவித்திருந்தார். அவரது தொலைநோக்குப் பார்வையிலான தலைமையின் கீழ், மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 15 ஆம் தேதியை "பழங்குடியினர் கௌரவ தினம்" ஆக கொணடாடுகிறது. இதன் மூலம் பகவான் பிர்சா முண்டா மற்றும் பிற பழங்குடியினச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாரம்பரியம் எதிர்காலத் தலைமுறையினருக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிப்பதை உறுதி செய்கிறது.
மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் திரு. ஜூவல் ஓரம் அவர்கள், இந்த "பழங்குடியினர் பெருமை ஆண்டு" இருவார விழாவை ஒரு மக்கள் இயக்கமாகக் கொண்டாட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பழங்குடியினச் சமூகங்களின் செழுமையான கலாச்சார அடையாளம், அறிவு அமைப்புகள் மற்றும் சாதனைகளை வெளிப்படுத்த வலியுறுத்தியுள்ளார்.
இமயமலையிலிருந்து கடலோரச் சமவெளிகள் வரை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வரை "பழங்குடியினர் பெருமை ஆண்டு" இருவார விழாவை முன்னிட்டுப் பல்வேறு கலாச்சார, கல்வி மற்றும் சமூக அடிப்படையிலான நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன.
இந்த பழங்குடியினர் பெருமை ஆண்டு" இருவார விழா, பழங்குடியின அடையாளத்தைக் கொண்டாடுவதற்கும், உள்நாட்டு அறிவுசார் அமைப்புகளை வெளிப்படுத்துவதற்கும், மேலும் பழங்குடியினரை அதிகாரப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முன்முயற்சிகள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கும் ஒரு நாடு தழுவிய தளமாகச் செயல்படுகிறது. பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் திரு. ஜூவல் ஓரம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, பழங்குடியினச் சமூகங்களை உள்ளடக்குவதன் மூலமும் அதிகாரமளிப்பதன் மூலமும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் கனவை நனவாக்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இந்தக் கொண்டாட்டங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.
கலாச்சார விழாக்கள் மற்றும் கண்காட்சிகள் முதல் கல்வி கருத்தரங்குகள் மற்றும் இளைஞர் நிகழ்ச்சிகள் வரை பலதரப்பட்ட நிகழ்வுகளுடன் இந்தக் கொண்டாட்டங்கள் தொடரும், மேலும் 2025 நவம்பர் 15 அன்று "பழங்குடியினர் பெருமை ஆண்டு" இருவார விழா நிறைவடையும்.
***
(Release ID: 2185559 )
AD/VK/RJ
(Release ID: 2185621)
Visitor Counter : 11