குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
ரோஹன் போபண்ணாவிற்கு குடியரசுத் துணைத்தலைவர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் வாழ்த்து
Posted On:
02 NOV 2025 6:21PM by PIB Chennai
குடியரசுத் துணைத்தலைவர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன், இருபது ஆண்டுகளுக்கும் மேலான குறிப்பிடத்தக்க தொழில்முறை டென்னிஸ் வாழ்க்கைக்குப் பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்த ரோஹன் போபண்ணாவிற்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
போபண்ணாவின் சிறப்பான சாதனைகளுக்காகத் குடியரசுத் துணைத்தலைவர் அவரைப் பாராட்டினார். ஆடவர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் தலா ஒரு முறை என இரண்டு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றதுடன், இரண்டு பிரிவுகளிலும் தலா இரண்டு முறை என நான்கு கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிகளில் பங்கேற்ற அவரது புகழ்பெற்ற பயணத்தைப் பாராட்டினார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் மிக அதிக வயதில் கிராண்ட் ஸ்லாம் வெற்றியாளர் மற்றும் மிக வயதான உலக நம்பர் 1 என்ற வரலாற்றுச் சாதனைகளைப் படைத்ததற்காக திரு. ராதாகிருஷ்ணன் போபண்ணாவைப் பாராட்டினார். மேலும், அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பும், சிறப்பிற்கான தேடலும் பல தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகமளித்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2185570
***
AD/VK/RJ
(Release ID: 2185612)
Visitor Counter : 5