பிரதமர் அலுவலகம்
கர்நாடக மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
01 NOV 2025 9:37AM by PIB Chennai
கர்நாடக மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில மக்கள் சிறந்த மனப்பான்மை மற்றும் கடின உழைப்பிற்கும் பெயர் பெற்றவர்கள் என்பதுடன், இலக்கியம், கலை, இசை போன்ற பல்வேறு துறைகளிலும் பிரசித்தி பெற்ற அம்மாநிலத்தின் சிறந்த கலாச்சாரத்தையும் இந்த தினம் கொண்டாடுகிறது என்று திரு மோடி கூறினார். கர்நாடகா மாநிலத்தின் வேரூன்றிய ஞானத்துடன், முன்னேற்றத்திற்கான உணர்வை உள்ளடக்கிய, அம்மாநில மக்களின் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
“இன்று, கர்நாடகா மாநிலம் உருவான தின விழாவைக் கொண்டாடும் வேளையில், அம்மாநில மக்களின் ஒருமித்த உணர்வு, கடின உழைப்பை பாராட்டுகிறேன். அம்மாநிலத்தின் இலக்கியம், கலை, இசை போன்ற பல்வேறு துறைகளில் பிரசித்தி பெற்ற சிறந்த கலாச்சாரத்தையும் நாம் கொண்டாடுகிறோம். ஞானத்தில் வேரூன்றிய முன்னேற்றத்திற்கான உணர்வை இந்த மாநிலம் கொண்டுள்ளது. கர்நாடக மாநில மக்கள் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.”
***
(Release ID: 2185016)
AD/RB/RJ
(रिलीज़ आईडी: 2185576)
आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam