குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பதஞ்சலி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பு

Posted On: 02 NOV 2025 1:35PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு , இன்று (நவம்பர் 2, 2025) உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள பதஞ்சலி பல்கலைக்கழகத்தின் இரண்டாவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று சிறப்பித்தார்.

அப்போது பேசிய குடியரசுத்தலைவர், மனித கலாச்சாரத்தின் வளர்ச்சிக்கு இந்தியாவின் மாபெரும் ஆளுமைகள் விலைமதிப்பற்ற பங்களிப்பைச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். முனிவர்களில் சிறந்தவரான மஹரிஷி பதஞ்சலி, யோகா மூலம் மனதின் தூய்மையையும், இலக்கணம் மூலம் பேச்சின் தூய்மையையும், ஆயுர்வேதம் மூலம் உடலின் தூய்மையையும் நீக்கினார் என்று அவர் கூறினார். மஹரிஷி பதஞ்சலியின் மகத்தான பாரம்பரியத்தை இந்தப் பதஞ்சலி பல்கலைக்கழகம் சமூகத்திற்குக் கொண்டு செல்வது குறித்துத் தான் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்தார்.

பதஞ்சலி பல்கலைக்கழகம் யோகா, ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவம் போன்ற துறைகளில் கல்வி மற்றும் ஆராய்ச்சியை முன்னெடுத்துச் செல்வதாகக் குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். இது ஒரு ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருக்கும் பாராட்டத்தக்க முயற்சி என்றும் அவர் கூறினார்.

குடியரசுத்தலைவர், பதஞ்சலி பல்கலைக்கழகத்தின் இந்தியாவை மையமாகக் கொண்ட கல்விப் பார்வையைக் கண்டு தான் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார். 'உலகளாவிய சகோதரத்துவம்' என்ற உணர்வின் நோக்கம், பண்டைய வேத அறிவை அதிநவீன அறிவியல் ஆராய்ச்சியுடன் ஒருங்கிணைத்தல் மற்றும் உலகளாவிய சவால்களுக்குத் தீர்வு காண்பது ஆகியவற்றை உள்ளடக்கிய கல்வி, இந்திய அறிவுப் பாரம்பரியத்தை நவீன சூழலில் முன்னோக்கிக் கொண்டு செல்வதாகவும் அவர் கூறினார்.

இந்தப் பல்கலைக்கழகத்தின் இலட்சியங்களுக்கி ணங்க கல்வி பெற்ற மாணவர்கள், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும் மற்றும் இயற்கைக்கு ஏற்ப தங்களின் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வதும் மனித குலத்தின் எதிர்காலத்திற்கு அத்தியாவசியம் என்பதை உணர்ந்திருப்பார்கள் என்று குடியரசுத்தலைவர் நம்பிக்கை தெரிவித்தார். காலநிலை மாற்றம் உட்பட உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள அவர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

உலகளாவிய நல்வாழ்வுக்கான விருப்பமே நமது கலாச்சாரத்தின் தனிச்சிறப்பு என்று குடியரசுத்தலைவர் கூறினார். இந்த நல்வாழ்வு, நல்லிணக்கத்திற்கும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கும் வழி வகுக்கிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் நல்லிணக்கத்தின் இந்த வாழ்வியல் மதிப்பை நடைமுறைப்படுத்துவார்கள் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

தனிநபர்களைப் பேணி வளர்ப்பது குடும்பங்களைப் பேணி வளர்ப்பதற்கு வழிவகுக்கிறது, இதுவே சமுதாயம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு வழிவகுக்கிறது என்று குடியரசுத்தலைவர் கூறினார். பதஞ்சலி பல்கலைக்கழகம் தனிநபர் மேம்பாட்டின் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான பாதையை ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் தங்கள் நேர்மையான நடத்தை மூலம் ஆரோக்கியமான சமூகத்தையும் வளர்ச்சியடைந்த இந்தியாவையும் உருவாக்குவதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்வார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

***

(Release ID: 2185439)

AD/VK/RJ


(Release ID: 2185549) Visitor Counter : 10