உள்துறை அமைச்சகம்
இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் படேலுக்கு அவரது 150-வது பிறந்தநாளில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உள்ளிட்டோர் புதுதில்லியில் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்
प्रविष्टि तिथि:
31 OCT 2025 3:09PM by PIB Chennai
இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் படேலுக்கு அவரது 150-வது பிறந்தநாளில் புதுதில்லியில் அவரது உருவப்படத்திற்கு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, தில்லி துணை நிலை ஆளுநர் திரு வினய் குமார் சக்சேனா, தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தேச கட்டுமானத்திலிருந்து தற்சார்பு இந்தியாவிற்கு அடித்தளம் அமைப்பது வரையிலான சர்தார் படேலின் பல பொதுநல பணிகளுக்காக, நாடு எப்போதும் அவருக்கு நன்றியுடன் இருக்கும் என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா தமது எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளார்.
***
(Release ID: 2184584)
SS/SMB/AS/SH
(रिलीज़ आईडी: 2184867)
आगंतुक पटल : 18